பிசாசியல்
DEMONOLOGY
53-11-12
ஓவென்ஸ்போரோ,கென்டக்கி அமெரிக்கா

இயேசு மேலும் அவர்கள் என்ன செய்தனர் என்றும் மற்றும் அது போன்றவைகளையும், அவர்களுடைய பெயர்களை அவர் அழைத்தார். "அது வேதாகமத்தில் எங்கே இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?". உங்களுக்காக நான் அதை வாசிக்கிறேன். பரிசுத்த யோவான் 1-ஆம் அதிகாரம் 24-வது வச- 40-வது வசனம் ...
இயேசு சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு கல் என்று அர்த்தமாம். யோவான் 1:40,41,42
பாருங்கள்? அவ்விடத்தில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும், வேதாகமம் முழுவதிலும் பல இடங்களில் அவ்வாறு இருக்கிறது. அவர் சகலத்தையும் அறிவார். உன்னுடைய பெயர், உன்னுடைய முகவரி, நீ எங்கே வசிக்கிறாய், நீ என்ன செய்கிறாய், அதைப் பற்றின எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். பாருங்கள்? அவருடைய விருப்பம் போல அவர் அதை வெளிப்படுத்துகிறார்.
ஆகவே இப்பொழுது, இன்றிரவு ஒரு சில நிமிடங்களுக்கு கூடுமாயின் சில காரியங்களை உங்களுக்கு முன்பாக கொண்டுவர நான் விரும்புகிறேன். வியாதியஸ்தர்களுக்காக தொடர்ந்து ஜெபிப்பதுதான் எனக்கு சிறந்ததாய் இருக்கும் என்று நான் சிந்திக்கிறேன். எனவே சில காரியங்களை உங்கள் நினைவுக்கு கொண்டுவர நான் விரும்புகிறேன். ஒருவேளை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். அநேகமாக நாம் அதை பார்த்துக்கொண்டிருக்கையில், அதற்கும் கூட நான் இங்கே ஒரு வேத வாக்கியத்தை எடுக்க விரும்புகிறேன்.
மேலும் அங்கே ஒரு... கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட "ரீடர்ஸ் டைஜஸ்ட்" -ஐ எத்தனை பேர் வாசித்தீர்கள், அதில் இருந்த அந்த "டானி மார்டனின் அற்புதம்" என்ற கட்டுரையை, அவன் குணமாக்கப்பட்டதை குறித்து? இங்கிருப்பவர்கள் யாரே னும் அதை எப்பொழுதாவது படித்து இருக்கிறீர்களா? நான் ஒரு சீமாட்டியை பார்க்கிறேன், வெறும் இரண்டு, மூன்று, ஓ, உங்களில் பலர், அதை வாசித்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நல்லது, இதோ இருக்கிறது.
2. தயவாய் இப்பொழுது அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில் வாசிக்க விரும்புகிறேன்.
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அடையாளங்களையும்... நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனை யின்படியேயும்... அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக் கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து... அக்கிரமக் காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது.
தாவீது... அவரைக்குறித்துத் தாவீது; கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது... என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்; அப்போஸ்தலர் 2:22-27
3. நம்முடைய தலைகளை ஒரு கணம் நாம் தாழ்த்தலாம்.
இப்பொழுதும், பிதாவே, அன்பானவரே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம்; எங்களுடைய மீறுதல்களை நீர் மன்னித்து, இப்பொழுது வரவிருக்கின்ற ஆராதானை பகுதியில் எங்களுக்கு உதவிசெய்யும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். அதன்பின் ஜெப வரிசையில், ஓ தேவனாகிய கர்த்தாவே, ஜனங்களுடைய இருதயத்தில் ஒரு துளி சந்தேகத்தைக்கூட சாத்தானால் ஏற்படுத்த முடியாத அளவிற்கு, இன்றிரவு உம்முடைய ஆவியானது மிகவும் அதிகப் படியான அதிகாரத்தை எடுத்துகொள்ளும்படி அருள் செய்யும்; ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே இசைவாக விசுவாசிக்கட்டும், மேலும் ஒரு மகத்தான சந்தோஷம் உண்டாயிருப்பதாக. வியாதியஸ்தர்களாகவும், வேதனைபடுகிறவர்களாகவும் இங்கே அமர்ந்திருக்கும் பலர், சுகமாக்கப்பட்டவர்களாக வீடு திரும்பட்டும்; பாவிகள் இரட்சிக்கப் பட்டவர்களாக வீடு திரும்பட்டும். பின்வாங்கி போனவர்கள் மறுபடியும் தேவனுடன் ஐக்கியப்பட்டவர்களாக வீடு திரும்பட்டும். அதை அருளும், பிதாவே, இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம், ஆமென்.
இப்பொழுது, நீங்கள் என்னை அனுமதித்தால், நான் கொஞ்சம் இங்கே வர முயற்சிக்கிறேன். நான் அந்த கடிகாரத்தை பார்க்க வேண்டும், ஏனெனில் நான் செய்யமாட்டேன்... ஜெப வரிசையை நான் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்க வேண்டும்.
4. இப்பொழுது, "ரீடர்ஸ் டைஜஸ்ட்"-ல், அது ஒரு அருமையான கட்டுரை. அது உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் அவர்க ளுக்கு எழுதி, கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட "ரீடர்ஸ் டைஜஸ்ட்" வேண்டுமென்று கூறுங்கள். மேலும் இப்பொழுது, நான் இந்த காரியங்களை பேசுகையில், நீங்கள் உணர்ச்சிவசப் பட்டு எழுந்து வெளியே போய்விடக்கூடாது என்று நான் - நான் விரும்புகிறேன்; நீங்கள் அமர்ந்து அதை முழுவதுமாக கேட்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், வெறும் ஒரு சில நிமிடங்களுக்கு, எனவே உங்களால் அது எப்படியாய் சித்தரிக்கப் படுகிறது என்றும், ஜனங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், மேலும் அந்த ஜனங்கள் எவ்வளவு - எவ்வளவு குறுகிய எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்றும் பார்க்க முடியும். நான்...
-
அதில் ஒரு - ஒரு ஒரு புகழ்பெற்ற கட்டுரையிருந்தது. அது நன்றாக எழுதப்பட்டிருந்தது. இப்பொழுது, நீங்கள் அதை பெரும் போது, நீங்கள் "டானி மார்ட்டனின் அற்புதம்" என்கிற ஒரு தலைப்பை காண்பீர்கள்,
அந்த சம்பவம் நிகழ்ந்தபோது, நான் கோஸ்டா மெசா, கலிபோர்னியாவில் இருந்தேன். இப்பொழுது, என்னுடைய சொந்த கூட்டத்தை பற்றி சாட்சியிட நான் விரும்புவதில்லை; மாறாக வேறுயாராவது அதை கூறுவதையே நான் விரும்புகிறேன்; ஏனெனில் நண்பர்களே, நான் ஒன்றை கூட செய்ததில்லை. அவையெல் லாவற்றையும் கூட்டத்தில் செய்தது இயேசு கிறிஸ்து.... நான் அதை செய்யவில்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் என்று எழுதப்பட்டதை நான் எப்பொழுதுமே சிந்தித்திருக்கிறேன், அது "அப்போஸ்தலருடைய நடபடிகள்" என்று அழைக்கப்படுகிறது. நான் விரும்புகிறேன்... இப்பொழுது என்னுடைய கருத்தின் படி, வேதாகமத்தை எழுதியவர்கள், அதை முதலில் ஒன்றாக சேர்த்தபோது ஆரம்பகால எழுத்தாளர்கள், அதை "அப்போஸ்தலருடைய நடபடிகள்" என்று அழைத்தார்கள். ஆனால் அது உண்மையாகவே என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால், "அப்போஸ்தலர்களுக்குள் இருந்த பரிசுத்த ஆவியின் நடபடிகள்" என்று, அவ்வாறு தான் அது இருக்கிறது. பாருங்கள்? அவர்கள் செய்... அப்போஸ்தலர்கள் ஒருபோதும் அதை செய்யவில்லை. அப்போஸ்தலர்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியின் நடபடிகள் இருந்தது, அதுதான் அதை செய்தது. ஆனால் ஒரு... அதை அழைத்தார்கள், எனவே நாம் அதை அப்படியே விட்டுவிட்டோம்.
5. இப்பொழுது, "ரீடர்ஸ் டைஜஸ்ட்" அதை இப்படியாக எழுதியிருக்கிறது. இந்த கதை எப்படி ஆரம்பிக்கிறது என்பதை கேட்டால், நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் படித்ததிலேயே மிகவும் உணர்ச்சிவசமிக்கதாகவும் இருதயத்தை நொறுக்குகிறதாகவும் இருக்கிற ஒரு கதையாயிருக்கிறது. அது வடக்கில் - வடக்கில் கனடாவின் சாஸ்காட்சுவானில் (Saskatchewan), தொலைதூர வடக்கில் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்தது. சாஸ்கடூனை சுற்றிலும் எனக்கு கூட்டங்களிருந்தது, மேலும் அங்கிருந்து,... அதுவரை, ஏன், நாங்கள் இருந்த அந்த இடத்தின் பெயரை நான் மறந்துவிட்டேன்: பத்தாயிரம் இந்தியர்களும் (சிகப்பு இந்தியர்கள்-ஆசி), எஸ்கி மோக்களும் கூட்டத்தில் இருந்தார்கள். மேலும் ஒரு - ஓ, இந்த இடத்தை விட பலமடங்கு பெரிதான இடம், முழுவதும் நிறைந்திருந்தது; அவர்கள், கூட்டத்திற்கு வந்திருந்த எஸ்கிமோக்களும், இந்தியர்களும் எல்லா இடங்களிலும் அமர்ந்திருந்தார்கள் மற்றும் வெளியிலும் நின்றிருந்தார்கள். மேலும் வெள்ளையர்கள்... பிரின்ஸ் ஆல்பர்ட்டில், சாஸ்காட்சுவான், பிரின்ஸ் ஆல்பர்ட்டில் இருந்தார்கள். எனவே அங்கு நடந்த கூட்டம் எனக்கு நினைவிருக்கிறது.
எப்படியாயினும், அங்கே செவிடாகவும் ஊமையாகவும் இருந்த இரண்டு நபர்கள் வேறொரு மாகாணத்தில் இருந்து வந்திருந்தார்கள், அவர்கள் பிறவியிலிருந்தே ஊமையாகவும் செவிடாகவும் இருந்தார்கள். அவர்கள் இருவருமே சுகமாக்கப்பட்டு, தங்களுடைய மாகாணத்திற்கு பேசுபவர்களாகவும் கேட்பவர்களாகவும் சென்றார்கள்.
6. அப்படியே சிறிய டானி மார்ட்டனும், அவனுக்கு ஒரு வித மான ஒரு அரிதான மூளை வியாதியிருந்தது. அந்த அந்த ஜனங்கள் அவனை பரிசோதனை செய்வதற்காக, அழைத்துச் சென்ற எல்லா இடங்களிலும், அவர்கள் அவனை கைவிட்டுவிடுவார்கள். அவர்கள் அந்த பையனை என்னுடைய என்னுடைய கூட்டத்திற்கு அழைத்து வந்தார்கள். இப்பொழுது முதலாவதாக, அந்த பையன் மரித்து விடுவான் என்று மருத்துவர் கூறினார். மாயோஸ், ஜான் ஹோப்கின்ஸ்... அவர்கள் அவனை ஐக்கிய நாடுகளில் (United States) வைத்திருந்தார்கள். அனைத்தும் அவனை கைவிட்டுவிட்டது; அதற்கு அறுவை சிகிச்சையே இல்லை. அது கூடாத காரியம்: அந்த வியாதிக்காக அந்த பையனுடைய தலையில் அறுவை சிகிச்சை செய்தால், அது அவனை உடனே கொன்றுவிடும்: என்று மாயோ சகோதரர்கள் கூறிவிட்டார்கள்.
இப்பொழுது, நிச்சயமாக மாயோ சகோதரர்கள் என்று "ரீடர்ஸ் டைஜஸ்ட்" கூறவில்லை, ஏனெனில் அப்படி கூறினால் மாயோ அவர்களை அதற்காக கண்டனம் செய்வார்கள். பொது தாள்களில் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆகவே அங்கே... ஆனால் நீங்கள் வரிகளுக்கு இடையே வாசித்து அதின் அர்த்தம் என்ன என்பதை காணலாம். அது என்ன கூறினது என்பதை காணலாம்.
7. ஆனால் நம்மிடம் ஒலிநாடா பதிவுகள் இருக்கிறது. அந்த காரணத்தால் தான் நம்முடைய கூட்டங்களில்... நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு கூட்டத்தையும் நாம் ஒலிநாடாவில் பதிவு செய்கி றோம். யாரோ ஒருவர் வந்து "நல்லது, கர்த்தர் என்னிடம் கூறினார், "குறிப்பிட்ட-குறிப்பிட்ட..." என்று கூறலாம், நாம் ஒலிப்பதிவை திரும்ப போட்டு, அது உண்மையா அல்லது இல்லையா என்று கண்டறியலாம்." பாருங்கள்? அப்பொழுது ஒலிப்பதிவில் சரியாக அது எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம் (பாருங்கள்?).
அது போல, சில காலத்துக்கு முன்பு, ஒரு பெண் என்னிடம் வந்து, "ஒரு குறிப்பிட்ட பெண் உடனே அப்பொழுதே சுகமாவாள் என்று கர்த்தர் கூறினாரே, ஏன்." என்றாள்.
நான், "நல்லது, அவர் அப்படி கூறியிருந்தால், அது அப்படியே..." என்றேன்.
"அவள் இன்னும் சுகமாகவில்லை" என்றாள்.
"நல்லது, எனக்கு தெரியவில்லை" என்று நான் கூறினேன்.
சகோதரன் ஹால் அவளோடு பேசிக்கொண்டிருந்தார், "நாம் ஒலிநாடாவை போட்டு கேட்போம்" என்று அவர் கூறினார். அது எந்த இரவு என்று கேட்டு, திரும்பி சென்று ஒலிநாடாவை எடுத்து வந்து ஓடச்செய்தார்... நல்லது, அதைப் பற்றி கர்த்தர் ஒன்றையுமே கூறவில்லை.
8. ஒரு முழுமையான அவிசுவாசியாக அந்த பெண் மேடைக்கு வந்திருந்தாள். அவள் ஒரு பணக்கார பெண்; இந்த வேலைக்கார பெண்தான் அவளை அழைத்துவந்திருந்தாள். இவள் அவளை சம்மதிக்க வைத்து, அவள் வரும்படி கெஞ்சினாள். இறுதியாக அவ்விதத்தில் இவள் அவளை மேடைக்கு அழைத்து வந்தாள், அவள் எங்கே இருந்தாள் என்றும், அவள் யார் என்றும், என்ன காரியம் என்றும் கர்த்தர் அவளிடம் கூறினார் மேலும் அவளுடைய இருதயத்தில் ஏன் அவ்வளவு அவிசுவாசம் இருக்கிறது என்றும் கேட்டார். அவள் "சரி...", அவள் விசுவாசிக்க முயற்சிக்க போவதாக கூறினாள்.
மேலும் நான்... அது அவளிடம் கூறியது... அதன்பின் அவர் பேசி முடித்த பிறகு, நான், "என் சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னை சுகமாக்குவாராக" என்றேன். அவள் மேடையை விட்டு கீழே சென்றாள். ஏன், அந்த... நான் அவளிடம் கூறினேன்; நான் "கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னை சுகமாக்குவாராக" என்றேன். ஆனால் தேவன் பேசும்போது, நீங்கள் அவர் பேசுவதை கேட்கிறீர்கள், அதை நீங்கள் அறிவீர்கள்-அப்பொழுது யார் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று. பேசுவது பிரசங்கியார் அல்ல; பேசுவது அவர் தான் என்று. அப்பொழுது அது வித்தியாசமாயிருக்கிறது. ஆனால் நான் பேசுவதோ, அது சற்றே மற்ற மனிதர்களை போன்றிருக்கும். அவள் சுகமாக வேண்டுமென்று நான் விரும்பி, அவளுக்காக நான் ஜெபித்தேன்; ஆனால் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான்.
ஆனால் அவள் "கர்த்தர் அப்படி கூறினாரே" என்றாள். அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் கவனியுங்கள், அவர்களுக்கு அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனியுங்கள், அப்பொழுது நீங்கள் எதின் மேல் சார்ந்திருக்க வேண்டும் என்பதை அறிவீர்கள்.
9. அந்த சிறு பையன்... இப்பொழுது, இங்கே "ரீடர்ஸ் டைஜஸ்ட்" -ல் அவர்கள் எழுதிய விதமாக. அந்த சிறு பையன்... இருந்து அழைத்துவரப்படுகிறான் அவனை ஒரு பனிச்சறுக்கு வண்டியில் (sled) அல்லது ஏதோவொன்றில் ஏற்றி அந்த இடத்திற்கு அழைத்து வர வேண்டியிருந்தது. அவன் பின்னி பிணைந்தது போல் இருந்தான். இந்த நிலைமையில் அவனுடைய சிறிய கைகளானது கீழாக வளைந்திருந்தது, அவனுடைய சிறிய கால்கள் அவனிடமாக சுருண்டு இருந்தது, சுமார் எட்டு வயது; அவனுடைய சிறிய தலையானது ஒருபக்கமாக சாய்ந்திருந்தது; அவனுடைய கண்களானது, ஒன்று ஒருபக்கமாகவும், இன்னொன்று இன்னொரு பக்கமாகவும் இருந்தது... ஓ, அது இருதயத்தை நொறுக்குகிற ஓர் காட்சியாயிருந்தது. அந்த சிறு பையன் இவ்விதமாக நடுங்கிக்கொண்டிருந்தான் மேலும் அவனிடம் மோசமான வாடை வீசியது.
அந்த மிகவும் பரிதாபமான தகப்பன், அந்த குதிரைகள் அவர்களை வழிநெடுக அழைத்து வந்ததால், அந்த சிறிய பனிச்சறுக்கு வண்டி ஏறக்குறைய தலைகீழாக விழுவது போல் ஆகிவிட்டது. அந்த பிரகாசமான இரவு நிலவு வெளிச்சத்தில் (the moonlight night) அந்த தகப்பன் அவனை தட்டிக்கொடுத்து, "பயப்படாதே, டானி, தேனே, நாம் இன்னும் தோற்று போகவில்லை" என்பார். என்னுடைய கூட்டத்தில் சுகமான இரண்டு பேரை அவருக்கு தெரியும் என்றார், "அந்த மனிதன் இருக்கும் இடத்திற்கு மட்டும் நான் சென்றுவிட்டால், தேவன் என்னு டைய குழந்தைக்காக ஏதோவொன்றை செய்வார்." என்றார்.
எனவே அவர்- அவர்கள் இறுதியாக விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள், அவரும் அவரின் மனைவியும், அவர்களால் முடியவில்லை - அவர்களால் முடியவில்லை - இல்லை - அவர்களில் யாரேனும் ஒருவர்கூட விமானத்தில் வருவதற்கு போதுமான பணம் இல்லை. இரயிலில் வருவதற்கும் அவர்களிடம் போதுமான பணம் இல்லை. எனவே அவர்கள் அந்த மனிதனை மட்டும் அழைத்துவர வேண்டியதாயிருந்தது, அவர் அந்த குழந்தையை அழைத்துவந்தார். அவர்கள் சாசக்கட்டூன், சாஸ்காட்சுவானிலிருந்து, லாஸ் ஏஞ்ஜிலஸ், கலிபோர்னியா வரை வந்து, பயணிகள் உதவி மையத்திற்கு உதவிக்காக சென்றார்கள்.
10. பின்பு, நிச்சயமாக, "ரீடர்ஸ் டைஜஸ்ட்டை" கவனியுங்கள். அது கூறியது அவர் தேடிக்கொண்டிருந்தார்... கூறியது, "ஒரு தெய்வீக என்ன?" ஒரு கேள்வி குறி. அவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். எனவே அவன் கூறினான்,"அதை சட்டை பண்ணாதே. அந்த மனிதன் இவனுடைய குழந்தைக்காக ஜெபித்தால், இவனுக்கு உதவி கிடைக்கும் என்பதை இந்த மனிதன் விசுவாசிக்கிறான்; ஆகவே நம்மால் அங்கே கொண்டு போக முடிகிறதா என்று பார்ப்போம்'. அவர்கள் விரைவாக ஒரு படிவத்தை நிரப்பினார்கள்; ஒரு காரை ஏற்பாடு செய்து, கோஸ்டா மேசாவுக்கு அவர்களை அழைத்து வந்தார்கள், ஒரு பெரிய பள்ளிக்கூடம் இருந்த அசெம்பிலிஸ் ஆப் காட் கூடார மைதானத்திற்கு, ஏறக்குறைய நாற்பது மைல்கள் அழைத்து வந்தார்கள். நான் ஊழியக்காரர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த இரவுப்பொழுதிலே அவனை அவர்கள் அழைத்து வந்தார்கள். மேலும் அங்கே அவன்... நாங்கள் அங்கே வந்த போது ஏறக்குறைய இரண்டாயிரத்து எழுநூறு பேர் வரிசையில் ஜெபித்துக்கொள்வதற்காக நின்றிருந்தார்கள் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் நிச்சயமாக, ஒவ்வொருவரும் ஜெப அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமா யிருந்தது. நான் ஜனங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்.
இப்பொழுது, இந்த இடத்திலிருந்து தான் எனக்கு தெரிய ஆரம்பித்தது. நான் அவர்களை பார்த்தேன். அவர் கூறியது இதோ, அவர்காரை விட்டு வெளியே இறங்கியபோது, அந்த ஜெப வரிசையில் நின்றிருந்த அந்த எல்லா ஜனங்களும், அந்த சிறிய கெனடா தொப்பியுடன், அந்த மிகவும் விடாய்த்து போன தகப்பன், இந்த பரிதாபமான சிறிய குழந்தையோடு நடந்து வருவதை பார்த்த போது அவர்கள் வழிவிட்டார்களாம்".அவர் சாப்பிடவே இல்லை. அவனுக்கு அவர் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப் போல மாற்றிவிடவேண்டியிருந்தது: அவனுடைய டையாபரையும் (Diaper) மற்றும் ஒவ்வொன்றையும். அவர் சாப்பிடவே இல்லை, சாப்பிட நேரமே இல்லை. அவர் அப்படியே ஓடி போய் தண்ணீ ரையும் மற்றும் அவன் சாப்பிட எதையாவது வாங்கி தந்து, பின்பு அப்படியே தொடர்ந்து செல்வார். ஓ, அது மிகவும் சோகமான கதை. இருந்தபோதும் அவர் இப்படி கூறிக்கொண்டே இருந்தார், "பரவாயில்லை, டானி, நாம் இன்னும் தோற்றுப்போகவில்லை, தேனே. நாம் இன்னும் தோற்றுப்போகவில்லை." அதுபோன்று கூறிக்கொண்டே இருப்பார்.
11. அந்த இடத்தில், அந்த நிலத்தில் வழிநெடுக ஜெபவரிசையில் நின்றிருந்த அந்த ஜனங்கள் பார்த்தபோது, இந்த பரிதாபமான மனிதன் வருவதை பார்த்தபோது, அவருக்கு அவருக்கான இடத்தைக் கொடுக்க அவர்கள் ஓரமாக ஒதுங்கினார்கள். நல்லது, அவர் மேடைக்கு வந்தபோது, பில்லி பால் அவரிடம் அவருடைய ஜெப அட்டையை கேட்டான். 'நிச்சயமாக அவரிடம் எதுவும் இல்லை. அவர், "ஐயா, நான் ஜெப அட்டையை வாங்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது" என்றார். நல்லது, ஜனங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற கட்டளைகள் பில்லிக்கும் வாயில் காப்போருக்கும் இருந்தது; அது சட்டப்பூர்வமானது, மேலும் அது சரியானது, கட்சிதமாக அது அப்படிதான் இருக்க வேண்டும். அவர் "நல்லது, அதெல்லாம் சரிதான்". என்று கூறியதை நான் கேட்டேன். "ஜெப அட்டையை வாங்க இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும்? நான் எங்கே செல்ல வேண்டும்?" என்றார்.
அவர்கள் ஜெப வரிசையை நிறுத்தி இருந்தார்கள். நான், "என்ன நடக்கிறது?" என்றேன்.
அவன் ஒரு - ஒரு, "ஜெப அட்டை இல்லாத ஒரு மனிதன்" என்றான்.
நான், "நல்லது, அவரை ஒருபக்கமாக ஒதுங்க சொல்" என்றேன்.
மேலும் நான் திரும்பி பார்த்து, அந்த குழந்தையை நான் பார்த்தேன், ஏதோவொன்று என்னிடம் "அவனை இப்பொழுது கூப்பிடு" என்று கூறியது. நான் அந்த குழந்தையை ஒருபோதும் கண்டதே இல்லை. எனவே அதைப்பற்றின முழு விவரத்தையும் "ரீடர்ஸ் டைஜஸ்ட்" கூறுகிறது.
12. நான் அந்த குழந்தையை மேலே அழைத்துவந்து, கூறினேன், ஒரு கேள்வியை கூட கேட்கவில்லை ஆனால் அந்த குழந்தையின் சிறிய முகத்தை நேராக பார்த்து, "நீங்கள் இந்த குழந்தையை கெனடாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறீர்கள். இங்கே நீங்கள் பேருந்தில் வந்திருக்கிறீர்கள், ஒரு கிரேஹௌன்ட் பேருந்தில் [Greyhound Bus - பேருந்து நிறுவனத்தின் பெயர்- ஆசி]. பயணிகள் உதவி மையம் உங்களுக்கு உதவி செய்தது" என்று கூறினேன். அவர் அங்கே சரியாக ஐந்து நிமிடங்கள் இருந்தார். கூறினேன், "இங்கே வருவதற்கு பயணிகள் உதவி மையம் உங்களுக்கு உதவி செய்தது. குழந்தையை மாயோ சகோதரர்களிடத்திலும், ஜான் ஹோப்கின்சினிடத்திலும் அழைத்து சென்றீர்கள். குழந்தைக்கு ஒரு அரிய மூளை வியாதி இருக்கிறது, எந்த விதத்திலும் அறுவை சிகிச்சை செய்ய அவர்களுக்கு வழியே இல்லை. குழந்தை இறந்து விடும்".
அவர் மிகவும் உரக்க சத்தமிட ஆரம்பித்தார். நான் அந்த சிறு குழந்தைக்காக ஜெபித்தேன். அவர் மிகவும் கத்தி அழுதபடியே மேடையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தார். அவர் திரும்பி பார்த்தார். அவர், "என்னுடைய குழந்தையை பற்றி என்ன? அவன் எப்பொழுதாவது குணமாகிவிடுவானா?" என்றார்.
நான், "ஐயா, அதைப்பற்றி நான் அறியேன்" என்றேன். நான் அவரோடு பேசிக்கொண்டிருந்த போது, ஒரு தரிசனம் வந்தது. நான் "ஆம், உங்கள் குழந்தை... இன்றிலிருந்து மூன்று நாளில் நீங்கள் ஒரு - ஒரு பழுப்பு நிறம்போன்றதை அணிந்திருக்கும் பெண்ணை சந்திக்க போகிறீர்கள், நீங்கள் அதை கோட்-சூட் என்று அழைப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்: அதில் கோட் இங்கே இருக்கும், கீழே ஸ்கர்ட் இருக்கும். அவள் கருத்த தலை முடியுடன் இருப்பாள். அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய கூடிய, ஒரு நாட்டு மருத்துவரை (country doctor) பற்றி அவள் உங்களிடம் கூறுவாள்; மேலும் நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். ஆனால் தேவனுடைய இரக்கத்தின் மூலமாக, உங்களுக்கிருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை அதுமட்டும்தான், அந்த அறுவை சிகிச்சைதான். அந்த மருத்துவர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும்படி நீங்கள் அனுமதியுங்கள்." என்று கூறினேன்.
13. நல்லது, அவர் அழுதபடியே மேடையை விட்டு கீழே சென்றார், அவர்... நல்லது, அவனுக்கு ஜெபித்த பிறகு மறுநாளில் குழந்தை மிகவும் நன்றாக இருந்தது: அவனுடைய சிறிய கைகளை நகர்த்த முடிந்தது. நல்லது, அந்த பெண்ணை பற்றி அவர் முழுவதும் மறந்துவிட்டார்; அவர் அந்த வழியாக செல்லவிருந்தார். ஆகவே, அன்றிலிருந்து சில நாட்கள் கழித்து, அவர் சாலையில் நடந்து சென்றார், குழந்தைக்கு காற்றோட்டமாய் இருக்கும்படி, அதை வெளியே அழைத்து சென்றார் (உங்களுக்கு தெரியுமா?), சாலையில் குழந்தையை நடத்தி கூட்டிச்சென்றார்; ஒரு -- அல்லது மாறாக குழந்தையை கையிலேந் தியவாறு சாலையில் நடந்து சென்றார். மேலும் ஒரு சீமாட்டி, "நல்லது, ஐயா, உங்களுடைய குழந்தையை பற்றின காரியம் என்ன?" என்றாள்.
அவர் கூறினார், "நல்லது, அது ஒரு ஒரு மூளை வியாதி." அவர், "ஒரு அரிதான மூளை வியாதி" என்றார்.
"உங்களுக்கு தெரியுமா, ஒருமுறை அதுபோன்று நிலையிலிருந்த ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒருவரை எனக்கு தெரியும், அந்த குழந்தை இப்பொழுது இயல்பாக இருக்கிறது." என்று அவள் கூறினாள்.
"நல்லது" அவர் கூறினார், "ஆனால், சீமாட்டியே..." கூறினார், "மாயோ சகோதரர்கள் கூறினார்கள்..." கூறினார், ஒரு நிமிடம் பொறு: 'ஒரு பழுப்பு நிற கோட்-சூட், கருத்த தலைமுடி... "சீமாட்டியே, அந்த மருத்துவர் எங்கே இருக்கிறார், சொல்?" என்றார். மேலும் "ரீடர்ஸ் டைஜஸ்ட்" அந்த இடத்தை பற்றியும், மருத்துவர் யார் என்றும் கூறுகிறது. அவர் அந்த குழந்தையை அங்கே அழைத்துசெல்கிறார், மேலும் அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை முற்றிலும் வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். அந்த குழந்தை அதிலிருந்து சரியாகி விடுகிறது. எனவே அவர்கள் அந்த குழந்தையை அங்கே வைத்திருந்தார்கள்; அவனால் ஓடி, தன்னுடைய தகப்பனையும் மற்றவர்களையும் சந்திக்க முடிகிற அளவுக்கு இருந்தான்.
அந்த தகப்பன் வசந்த காலத்தில் கோதுமை அல்லது ஏதோவொன்றை விதைப்பதற்காக திரும்பி சென்றார். இப்பொழுது, இதைதான் "டைஜஸ்ட்" புரிந்து கொள்ளவில்லை (பாருங்கள்?), இதைதான் காட்சிபடுத்தவில்லை. ஆனால் அதற்கு பின்னாக என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும், ஏனெனில் நீங்கள் அறிந்துகொண்டால், அந்த மருத்துவமனை இந்த பத்திரிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்துவிடுவார்கள், அதினால் தான் அந்த தவறு நடந்து இருக்கும். யாரோ ஓருவர் ஒரு இரவில் ஜன்னலை திறந்தவாறே விட்டுவிட்டார், மிகவும் குளிர்ந்த காற்று அந்த குழந்தையின் மீது வீசியதால் அந்த குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு நாள் நிமோனியாவுடன் ஜீவித்தான், அந்த வியாதியுடன் அல்ல, நிமோனியாவுடன் இருந்ததால், அது அந்த குழந்தையை கொன்றது. "ரீடர்ஸ் டைஜஸ்ட்" அதை குறிப்பிடுகிறது. பின்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் அதை பற்றி மிகவும் நன்றாக எழுதி, என்னவாயினும் அந்த அற்புதம் ஏற்கனவே நடந்துவிட்டது என்று எழுதியிருக்கிறது.
14. நல்லது, அதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு ...
நான் உங்களிடம், ஒரு இரவில் நான் "பிசாசியல்" பற்றி பேச போகிறேன் என்று கூறியிருந்தேன். அடுத்த சில நிமிடங்களுக்கு நான் "பிசாசியலை" பற்றி பேச விரும்புகிறேன். அடுத்து...
என்னால் கூடுமானால், நான் ஒரு புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள்... ஆனால் அந்த - அதை குறித்து பிசாசியலை குறித்து: பிசாசுகளோடு என்னுடைய தனிப்பட்ட தொடர்பை குறித்து நான் எழுதிமுடிக்கும்போது, உங்களால் அதை வாசிக்க முடியுமா அல்லது முடியாதா என்பதை நான் அறியேன்.
நண்பர்களே, நீங்கள் எப்படி நிஜமாக இருக்கிறீர்களோ அவ்வாறே அவைகளும் நிஜமானவைகள். பல நேரங்களில், நான் அவைகளை பார்த்திருக்கிறேன், அவைகள் வெளியேறும்போது சரியாக... சரியாக இங்கிருக்கும் இந்த மேடையிலிருந்து அவைகள் வெளியேறுவதை நான் பார்த்திருக்கிறேன். நான் அவைகளை பார்க்கிறேன், அவைகளில் சில வௌவால் வடிவிலிருக்கும், அவைகளின் கால்களில் நீளமான முடிகள் தொங்கி கொண்டிருப் பது போன்று இருக்கும். ஆனால் ஒரு வலிப்பு நோய் பிசாசு பார்ப்பதற்கு ஒரு ஆமையை போல வட்ட கால்களுடன், அப்படியே தொங்கி கொண்டிருக்கும். ஆனால் வழக்கமாக, இடுக்கண் செய்யும் பிசாசு பார்ப்பதற்கு கொஞ்சம் ஒரு மேக வடிவம் போல் இருக்கும், ஒரு அலையை போன்று; மேலும் அது நீங்கள் அந்த ஆவியை பார்க்க வேறொரு பரிமாணத்தில் இருக்கும்போது. அது மிகவும் ஒரு வேடிக்கையான சத்தத்தை எழுப்பும்.
இப்பொழுது, அது தவறு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த நாட்களில் சிலவற்றில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். நீங்கள் மட்டும் ஆவிக்குரிய கண்ணாடியை எடுத்து, உங்களுடைய ஆத்துமாவை, உங்கள் சந்தேகத்தை பார்த்தால், அது எவ்வாறு இருக்கிறது என்பதை உங்களால் கண்டறிய முடியும். மேலும் மிகப்பெரிய பிசாசாகவும் மற்றும் எல்லா பிசாசுகளுக்கும் தலைவனாகவும் இருப்பது அவிசுவாசம்தான். இருக்கிற ஒரே பாவம் அதுமட்டும்தான். அவிசுவாசத்தை தவிர பாவம் என்று வேறெதுவுமே இல்லை. இந்த எல்லா ஒழுக்க நெறிகளும் மற்றைவைகளும்: புகைபிடிப்பது, குடிப்பது, சூதாடுவது மற்றும் விபச்சாரம் செய்வது; அவையெல்லாம் தன்மைகள் மட்டுமே. நீங்கள் அவைகளை செய்கிறீர்கள் ஏனென்றால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. நீங்கள் அதை செய்யும்படி பண்ணுவது அவிசுவாசிதான், நீங்கள் ஒரு விசுவாசியாயிருந்தால், நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள். அது சரி.
15. இப்பொழுது, அது ஆவியின் வரங்களை போன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்: ஆவியின் வரங்கள் என்பது பரிசுத்த ஆவி கிடையாது; அது பரிசுத்த ஆவியின் தன்மைகளே. பாருங் கள்? குணமாக்கும் வரம், அந்நிய பாஷை பேசுவது, மேலும் அந்த எல்லா மற்ற காரியங்களும் தன்மைகள்தான்; மரம் பிறப்பிக்கக் கூடிய ஒரு கனியாக அது இருக்கிறது. பாருங்கள்? அந்த மரம்தான்: பரிசுத்த ஆவிதான் முக்கியமானதாக இருக்கிறது. மேலும் பரிசுத்த ஆவி தேவனாயிருக்கிறது, மேலும் தேவன் அன்பாயிருக்கிறார்.
மேலும் - ஆனால் அந்த மூன்று பத்திரிக்கைகளை பற்றி, விநோதமான காரியம்... எனக்கு நிச்சயமாக தெரியாது. இந்த கட்டுரை வெளிவருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, திருமதி. பைப்பர் (Mrs. Piper) பற்றின, நியூயார்க்கில் இருக்கும் அந்த புகழ்பெற்ற ஆவிகளோடு பேசுபவளை (spiritualist) பற்றின அந்த கட்டுரையை உங்களில் அநேகர் வாசித்திருப்பீர்கள். இங்கிருப் பவர்களில் எத்தனை பேர், "திருமதி. பைப்பரை" பற்றி வாசித்திருக்கிறீர்கள்? என்னுடையது வெளி வருவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு அது பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது. நல்லது, ஒன்பது - 1895-லிருந்து, முழு உலகமும் அந்த பெண்ணை தடுமாற செய்ய முயற்சித்தது.
இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் கிறிஸ்தவர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், கிறிஸ்தவ விசுவாசிகளே உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்? எனக்கு வேண்டும்... உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் இருந்து, "சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு விசுவாசி" என்று நீங்கள் கூறவேண்டும் என்று நான் விரும்புகிறேன் நல்லது, உங்களில் அநேகர் இருக்கிறீர்கள். எல்லாம் சரி.
16. இப்பொழுது, நான் நேரடியாக கிறிஸ்தவர்களிடம் பேசுகிறேன், ஆகவே உங்களால் நன்மையையும் தீமையையும், எதிர்மறையையும் நேர்மறையையும் காண முடியும், யாரேனும் உங்களிடம் கேட்டால், அப்பொழுது உங்களால் அவர்களுக்கு ஒரு - ஒரு பதிலை கூற முடியும்.
இப்பொழுது, தேவனிடம் இருக்கும் ஒவ்வொன்றிற்கும், பிசாசு ஒரு போலியை வைத்திருக்கிறான். நீங்கள் சென்று நீங்கள் செய்ய விரும்பும் எதைவேண்டுமானாலும்... இந்த பழைய நடனங்களை போன்றவைகளை பாருங்கள்; அது பிசாசுடையது; ஆனால் ஜனங்களுக்கான பரிசுத்த நடனத்தை தேவன் கொண்டிருக்கிறார். வேதாகமம் அப்படிதான் கூறுகிறது.
என்ன செய்யவேண்டும் என்று தேவன் என்னிடம் கூறும் வரை, நீங்கள் பார்த்ததிலேயே அதை பற்றி குறை கூறுவதில் நான் மிகப்பெரிய குறை கூறுபவனாக (greatest critics) இருந்தேன், மிரியாம் ஆவியில் நடனமாடினாள் என்பதை கண்டறிந்தேன். தாவீது தான் ஜெயங்கொண்டபோது நடனமாடினான். மேலும் ஓ, பல சமயங்களில் அது... அவை எல்லாமுமே ஊடாக... ஜெயத்தினூடாக. அது நடனமாயிருந்தது, பரிசுத்த நடனமாயிருந்தது.
17. உதாரணத்திற்கு, வேதாகமத்தில், ஒரு சொப்பனக்காரன் சொப்பனம் கண்டால் அல்லது ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தால், அவர்களிடம் ஒரு - ஒரு பதக்கம் இருந்தது அது ஊரீம் தும்மீம் என்று அழைக்கப்பட்டது அது ஆரோனின் மார்பின் மீது இருந்தது. அவர்கள் இந்த பதக்கத்தின் முன்பு சென்று பேசினால், அந்த பதக்கத்தில் வெளிச்சம் பிரகாசிக்கும், அதுதான் உண்மை யென்று தேவன் அதை உறுதிப்படுத்துவார். அது உண்மைதானே? ஒருவேளை அது அங்கே பேசவில்லை என்றால், அப்பொழுது அது தவறானது. இப்பொழுது, பாருங்கள். பிசாசும் அதேபோன்ற ஒரு மாதிரியில் வந்தான், ஒரு படிக பந்துடன் (crystal ball). பாருங்கள்? ,
தேவனிடமிருக்கும் ஒவ்வொன்றுமே இயற்கையில் இருக்கும் ஒவ்வொன்றுமே ஆவிக்குரியதற்கு மாதிரியாயிருக்கிறது. நான் மாதிரியை வைத்து ஒப்பிட்டு பேசுபவன் (typologist) என்பதை நான் அறிவேன். இயற்கையில் இருக்கும் ஒவ்வொன் றுமே ஆவிக்குரியதற்கு மாதிரியாய் இருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கவில்லையா?
18. உதாரணத்திற்கு, இது போன்று: இயேசு கல்வாரியில் மரித்த போது, எத்தனை என்னென்ன மூலபொருட்கள் அவருடைய சரீரத்திலிருந்து வெளிவந்தது? ஜலம், இரத்தம், ஆவி. அது சரிதானே? இப்பொழுது, புதிய பிறப்பையும் அதுதான் உருவாக்குகிறது என்பதை எந்தவொரு ஊழியக்காரனும், எந்தவொரு விசுவாசியும் அறிவார்கள். அது சரிதானே? அதுதான் புதிய பிறப்பை உருவாக்குகிறது, பரிசுத்த யோவான் 7:5: "ஏனெனில் சாட்சியிடுகிறவைகள் மூன்று இருக்கிறது... ஜலம், இரத்தம் மற்றும் ஆவி". அவர்கள் அவரின் விலாவிலே குத்தியபோது, ஜலமும், இரத்தமும் வெளியே வந்தது. அவர், "உம்முடைய கரங்களிலே என் ஆவியியை ஒப்புக்கொடுக்கிறேன்" என்று கூறினார். அந்த மூல பொருட்கள் அவருடைய சரீரத்தில் இருந்து வெளியே சென்றது, மேலும் உங்களை அவருடைய சரீரத்திற்குள் கொண்டு வர அந்த அதே மூல பொருட்கள் தான் தேவையாயிருக்கிறது. அதுதான் புதிய பிறப்பை உருவாக்குகிறது.
இப்பொழுது, ஒரு இயற்கையான பிறப்பை உருவாக்குவது எது? இது அனைவரும் கலந்திருக்கக்கூடிய ஜனக்கூட்டமாயிருக் கிறது (mixed audience), ஆனால் கவனியுங்கள். முதலாவது காரியம் என்னவென்றால் ஜலம், இரத்தம், ஆவி. பாருங்கள்? ஒவ்வொன்றுமே இயற்கையில் இருக்கும் ஒவ்வொன்றும் மற்றும் ஆவிக்குரிய எல்லாமும் ஒன்றாக ஒத்துப்போகிறது. கவனியுங்கள். தேவனோடு பழகி அறிமுகமாகுங்கள், அப்பொழுது நீங்கள் அவருடைய மகத்தான அசைவை இயற்கையில் பார்ப்பீர்கள். அவரை நீங்கள் சூரிய அஸ்தமனங்களில் பாருங்கள், பூக்களில் பாருங்கள், ஒவ்வொரு இடங்களிலும் பாருங்கள். உங்களை சுற்றி இருக்கிற எல்லா இடங்களிலும் உங்களால் அவரை பார்க்க முடியும் ஏனெனில் உங்களை சுற்றி இருக்கும் எல்லா இடங்களிலும் அவர் இருக்கிறார். அதாவது நீங்கள் அவரோடு நேசத்தில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் - அவரும் உங்களோடு நேசத்தில் இருக்கிறார் என்கிற பரிபூரண நம்பிக்கையை அது உங்களுக்கு தருகிறது. அவர் உங்களை நேசித்தார், உங்களை முன்குறித்தார், உலகம் தோன்றுவதற்கு முன்பே உங்களை முன்குறித்தார், உங்களை இங்கே அழைத்துவந்து, உங்களை இரட்சித்து, உங்களை சுத்தமாக்கி, மேலும் உங்களை அவருடைய ஆவியினால் நிரப்பியிருக்கிறார். அப்படியானால், எப்படி உங்களிடம் சந்தேகம் இருக்க முடியும்?... ? ...அது. பாருங்கள்? அது உங்களுக்கு விசுவாசத்தை பரிபூரணமாக அமையச்செய்கிறது. நீங்கள் அந்த காரியங்களை அறிந்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு தைரியத்தை அளிக்கிறது, என்னே, நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை உங்களால் அறிந்துக்கொள்ள முடியும்.
19. இப்பொழுது, நம்முடைய பொருளுக்கு திரும்பி வருவோம். அவர்கள் எடுத்துக்கொண்ட, இந்த பெண்... திருமதி பைப்பர், அவள் ஒரு குடும்ப தலைவியாக (House wife), சாதாரண பெண்ணாக இருந்தாள். அந்த கட்டுரையை நீங்கள் வாங்கிகொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்றை அனுப்புவதில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்" மகிழ்ச்சியடையும். என்னிடம் இன்னும் ஒன்றுமட்டும்தான் மீதமுள்ளது இல்லையென்றால் நான் அதை உங்களுக்கு தருகிறேன் என்று கூறிவிடுவேன். மேலாளர்களில் ஒருவராகிய, திரு பாக்ஸ்டரிடம் ஒன்று இருக்கிறது.
அவளை பற்றி அதில் பத்து பக்கங்களுக்கு அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நீண்ட காலத்துக்கு - ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவள் தன்னிலை மறந்த நிலைக்கு செல்ல (trances) ஆரம்பித்தாள், மரித்தவர்களோடு அவள் பேசுவாள். இப்பொழுது, அது ஆவிகளோடு தொடர்பு கொள்வதாயிருக்கிறது (spiritualism), அது பிசாசினுடையது. இப்பொழுது.
அதன்பின் அவர்கள் அவளை இங்கிலாந்திற்கு கூட்டிச் சென்றார்கள். இங்கிலாந்திலிருந்த சிறந்தவர்களை அவள் சவாலில் தோற்கடித்தாள். அவளை இத்தாலிக்கு கூட்டிச் சென்றார்கள், ஒவ்வொரு இடங்களுக்குமே; அவளுக்கு முன்பாக அவர்கள் வைத்த எல்லா சவால்களையும் அவள் ஜெயித்தாள்; 'ஏனெனில் அவள் எல்லா நேரங்களிலும் மரித்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் இத்தாலிக்கு சென்று, ஆங்கிலம் பேச தெரிந்த ஒரு மனிதனை கண்டுபிடித்து, அவனை இங்கிலாந்திற்கு அழைத்து வந்து, அவனுக்கு ஒரு வெள்ளைக்காரன் போல் உடை உடுத்தி, வெள்ளைக்காரன் போல் காண்பிப்பார்கள், மேலும் அவனுடைய நண்பர்களில் மரித்த ஒருவனை அழைப்பாள், யார் என்று அவன் கூறுவான் அவனிடம், "நல்லது, நமக்கு இருந்த அந்த முக்கியமான தருணங்கள் நினைவிருக்கிறதா", மேலும் அவர்கள் எங்கேயெல்லாம் சென்று என்னவெல்லாம் செய்தார்கள், ஒவ்வொன்றையும் அப்படியாக கூறுவான். ஒரு ஆவிகளோடு தொடர்புகொள்பவனின் கூட்டத்தில், கொஞ்ச காலத்திற்கு முன்பு ஏதோவொரு தேசிய தலைவர், ஆவியாக இருக்கும் தன் அம்மாவின் கையை முத்தம் செய்ததாக நினைத்தாராம், ஆனால் அடுத்த நாள் காலையில் காவல் நிலையத்தில் அவர் ஒரு மிருதுவான சிறிய பஞ்சு ஆடையை முத்தமிட்டார் என்று நிரூபிக்கப்பட்டது: வெறும் ஒரு வித்தை என்று இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று "ரீடர்ஸ் டைஜஸ்ட்" கூறுகிறது.
20. ஆனால் உண்மையாகவே ஆவிகளோடு பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள்; அவள் பிசாசை சேர்ந்தவள். மேலும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான தேவ ஆவியும் இருக்கிறது. இப்பொழுது, வேதாகமத்தில், கடைசி நாட்களில், கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அது அவ்வளவு பக்கத்து பக்கத்தில் இருக்கும் என்று இயேசு கூறினார். அந்த சிறந்த, உலகத்திலேயே மிக அதிகமாக வெளியிடப்படும் பத்திரிக்கையில், திருமதி பைப்பரை பற்றின கட்டுரை வந்த உடனே... சிறிது இடை வேளையில், அந்த இரண்டு கட்டுரைகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது விசித்திரமாக இல்லையா?
இப்பொழுது, தங்களுடைய வேதாகமத்தை அறியாத, தேசத்தில் இருக்கும் பிரசங்கிமார்களை பற்றி பேசினால், அவர்கள் எனக்கு நூற்று கணக்கான கடிதங்களை அனுப்பி: "எல்லாம் சரி,
சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் இப்பொழுது எங்கே நிற்கிறீர்கள் என்பதை கட்சிதமாக நாங்கள் பார்க்கிறோம். அதுதான் உங்கள் நிலை. அதோ அந்த ஆவிகளோடு பேசுபவள் இருக்கிறாள், அவள் இப்பொழுது நியூயார்க்கில் இன்னும்கூட நூறு வயதை தாண்டி உயிரோடிருக்கிறாள்." என்று "ரீடர்ஸ் டைஜஸ்ட்" கூறுகிறது. "முழு செவிடாக" அங்கே அமர்ந்திருக்கிறாள். ஆனால் விஞ்ஞான உலகம் அவளை பார்த்துக்கொள்கிறது, ஏனெனில் அவர்கள் அவளை ஒரு சோதனை எலியாக (Guinea pig) பயன்படுத்தினார்கள். அதன்பின் அவர்கள் அடி பாகத்தில் (bottom) இப்படியாக இருக்கிறது என்று கூற வேண்டி யிருந்தது, "ஜனங்களுடைய வாழ்க்கை இங்கே முடியும்போது, அவர்கள் வேறெங்கோ வாழ்கிறார்கள், ஏனெனில் அவள் அவர்களை மேலே அழைக்கிறாள். அவள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்றாள். அவர்கள் அவளை ஒவ்வொன்றிலும் சோதித்துப் பார்த்தார்கள். அவள் மரித்தவர்களின் ஆவியை அழைப்பாள். ஏன், நீங்கள் அதை செய்ய வேண்டியதில்லை. வேதாகமம் அப்படி கூறுகிறது. ஆனால் அது பிசாசினுடையது.
21. அதன்பின், என்னுடைய செயலாளர் கடிதங்களை பெட்டி முழுவதும் அடுக்கும் வரை, ஊழியக்காரர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு கடிதங்களை ஏராளமாக அனுப்பினார்கள், "அதுதான் உங்கள் நிலை, சகோதரன் பிரன்ஹாமே, அது கட்சிதமாக காண்பிக்கிறது... நீர் ஒரு ஆவிகளோடு பேசுபவர் (spiritualist) என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்."
ஆகவே நான் அமர்ந்து ஒரு - ஒரு தபால் படிவத்தை (form letter) எழுதினேன். இப்பொழுது, கவனமாக கேளுங்கள். நான் அவர்களுக்கு கூறியது இதுதான், "சகோதரர்களே, தேவனை பற்றி நீங்கள் அறிந்தது அவ்வளவுதான் என்றால், பிரசங்க பீடத்திற்கு பின்னால் இருந்து நீங்கள் வெளியே வந்துவிடவேண்டும்" என்று கூறினேன். அது மிகவும் சரி. "தேவனை பற்றி நீங்கள் அறிந்தது அவ்வளவுதான் என்றால், நீங்கள் பிரசங்க பீடத்திற்கு பின்னாக நிற்க வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் சாத்தான் உங்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம், மேலும் அதை பற்றி நீங்கள் ஒருபோதும் ஒன்றையுமே அறிந்திருக்கமாட்டீர்கள். ஏன், அது ஒரு அவமானமாயிருக்கிறது.
22. நண்பர்களே, இப்பொழுது உங்களுக்கு நான் ஒரு எளிமை யான காரியத்தை காண்பிக்கிறேன். அந்த இரண்டு பத்திரிக்கைகளையும் நீங்கள் வாங்கிகொள்ளுங்கள்; அவைகளை நீங்களே வாசியுங்கள், இரண்டு - இரண்டு கட்டுரைகளையுமே. இப்பொழுது, முதலாவது காரியம், அதாவது நான் அந்த இரண்டு ஆவிகள், இயேசு கூறினார், கடைசி நாட்களில்... 'நிச்சயமாக பிசாசுகளின் ஆவிகள் எழும்புகின்றன; நிச்சயமாக அவைகள் எழும்புகின்றன. அவைகள் எப்பொழுதுமே இங்கேதான் இருக்கிறது. இயேசு வரும்வரை அவைகள் இருக்கத்தான் செய்யும். அவை சரியாக ஜனங்களில் ஜீவிக்கிறது, ஜனங்களோ அதை அறிவதில்லை. அது அவர்களுக்கு அசுத்தமான பழக்கங்களையும் மேலும் - மேலும் வியாதிகளையும், நோய்களையும் தருகிறது மற்றும் எல்லாவிதமான... ஒவ்வொன்றிற்குமே ஒரு ஆவிதான் காரணம்.
செவிட்டு தன்மை என்பது ஒரு ஆவி (spirit). அதை நீங்கள் அறிவீர்களா? நரம்புகள் மரித்துவிட்டது என்று மருத்துவர் கூறுகிறார். ஆனால் அதை மரிக்கும்படி செய்தது எது? அதை மரிக்கும்படி செய்தது எது? வேதாகமம் கூறுகிறது, "செவிட்டு ஆவி (spirit) அந்த மனிதனை விட்டு வெளியே வந்தபோது, அவனால் கேட்க முடிந்தது." அது சரிதானே? ஆகவே அது ஒரு ஆவியாயிருக்கிறது.
புற்று நோய் என்பது ஒரு ஆவியாயிருக்கிறது. கட்டி (tumor) என்பது ஒரு ஆவியாயிருக்கிறது. அந்த எல்லா காரியங்களும்... வலிப்புநோய் என்பது ஒரு ஆவி. இயேசு அந்த சாத்தானை கடிந்துகொண்டார்; வலிப்போடு இருந்த அந்த பையன், அவன் தரையிலே விழுந்து அவனுக்கு இருந்ததிலேயே மிக மோசமான வலிப்பால் இழுக்கப்பட்டான். ஆனால் அதை அவன் கடந்ததும், அதோடு அது அவனுக்கு முற்றுபெற்றது. பாருங்கள்? அவர்களில் பலர், "நல்லது, அவன் சுகம் பெறவில்லை. அவனை பாருங்கள்; அவனுக்கு இதுவரை இருந்ததிலேயே மிகவும் மோசமான வலிப்பு ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார்கள். ஆனால் அது எல்லாம் அவ்வளவுதான். பாருங்கள்?
23. கவனியுங்கள். இப்பொழுது, அந்த பெண்... இன்றிரவு இங்கே இருக்கும் மனிதர்களில் உங்களில் யாருக்காவது நான் ஒரு டாலர் நோட்டை கொடுத்து, இப்படி கூறினால், "இது... நான் உங்களுக்கு ஒரு தபாலின் உறையை (envelope) கொடுத்து", "இது ஒரு டாலர் நோட்டா?" என்று கேட்டால்,
ஏன், "நிச்சயமாக இல்லை" என்று நீங்கள் கூறுவீர்கள். அதில் பிசாசு மிகவும் சாமர்த்தியசாலியாகயிருக்கிறான்.
ஆனால் இயேசு கூறினார், "அந்த இரண்டு ஆவிகளும் மிகவும் பக்கத்து பக்கத்தில் இருக்கும், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கும். அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு டாலர் நோட்டை கொடுக்கிறேன் என்றால், அது பார்ப்பதற்கு முழுவதும் ஒரு அசலான டாலர் நோட்டை போலவே இருக்க வேண்டும், இல்லையென்றால் உடனே அதை நீங்கள் கண்டு பிடித்து விடுவீர்கள். அது சரிதானே? நண்பர்களே, சாத்தான் அவ்விதமாகத்தான் வருகிறான். அது ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. கம்யூனிஸ ஆவி, ஒரு அந்திகிறிஸ்துவாயிருக்கிறது, ஆனால் அந்த அந்திகிறிஸ்துவை பற்றி இயேசு பேசவில்லை. எதுவாக இருந்தாலும் அது...
அந்திகிறிஸ்துவின் ஆவி மிகவும் பக்திமானாயிருக்கிறது. காயீன், அவனை பற்றி நான் உங்களுக்கு கூறிக்கொண்டிருந்தேன், ஆபேல் எவ்வளவு பக்திமானயிருந்தானோ, அவனும் அவ்வளவு பக்திமானாயிருந்தான். அந்த காரியங்கள் சரியாக வருகிறது, அவர்கள் சகோதரர்களாயிருந்தார்கள். ஏசா மற்றும் யாக்கோபு... ஒவ்வொன்றுமே இருந்தது...
கிறிஸ்துவும் யூதாசும் மேலும் இயேசு... சில ஜனங்கள் கொல்கதாவிலே மூன்று சிலுவைகளை மட்டுமே பார்க்கிறார்கள். அவைகள் நான்காயிருந்தன. அங்கே இயேசுவும், ஒரு கள்ளனும் மற்றும் இன்னொரு கள்ளனும் இருந்தார்கள். "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்." யூதாஸ் ஒரு காட்டத்திமரத்திலே தூக்கு போட்டுக் கொண்டான். அது சரிதானே? இயேசு எப்படி சிலுவையில் இருந்தாரோ அதே போல அவனும் ஒரு மரத்தில் இருந்தான்.
இப்பொழுது, அங்கே தேவனுடைய குமாரன் பரலோகத்தி லிருந்து வந்து, அந்த மனந்திரும்பிய பாவியை அழைத்துகொண்டு மீண்டும் பரலோகத்திற்கு சென்றார். அங்கே கேட்டின் மகன் நரகத்தில் இருந்து வந்தான், நரகத்திலிருந்து வந்து, மனந்திரும்பாத பாவியை மீண்டும் நரகத்திற்கு கூட்டிச்சென்றான். "நீர் இருந் தால்?" அது தேவனுடைய வார்த்தையின் மீதான கேள்விக்குறி; "நீர் தேவனுடைய குமாரனேயானால்..."
ஆனால் மற்ற ஒருவனோ அதை அறிய ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவன், "கர்த்தாவே, நீர் வரும்போது என்னை நினைவுக்கூரும்" என்று கூறினான். பாருங்கள்?
24. இப்பொழுது, அந்த நன்மையையும் மற்றும் தீமையையும் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, நான் உங்களிடம் ஒரு டாலரை கொடுத்தால், நீங்கள் ஒரு புத்திசாலியாக இருந்தால், அது இங்கே அது - அது வரையப்பட்டிருக்கிறதா, அதை போன்று இது அப்படியே இருக்கிறதா என்று பார்ப்பதே நீங்கள் அந்த டாலரில் செய்யும் முதல் செய்கையாயிருக்கும். நீங்கள் செய்யபோகும் முதல் காரியம் அதை கையில் எடுத்து அதை தொட்டுப்பார்ப்பீர்கள். ஒரு உண்மையான டாலர் வெறும் காகிதம் அல்ல; அது பட்டு (silk). அதிலிருக்கும் மதிப்பே, அதை ஒரு டாலர் ஆக்குகிறது.
சரி இப்பொழுது, அதை நாம் இப்பொழுது இந்த இரண் டோடு ஒப்பிட்டு பார்ப்போம்: ஒருபக்கத்தில் திருமதி பைப்பர், மறுப்பக்கத்தில் - தேவனுடைய பிரதிநிதியாக என்னை மறுப்பக்கத்தில் எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது, பாருங்கள். அந்த முழு கட்டுரையுமே... அதை நீங்களே படித்து பார்த்து ஜனங்கள் எப்படி அந்த அளவிற்கு தளர்ந்த சிந்தையுடன் இருக்க முடியும் என்று பாருங்கள். ஒரு...
கடந்த ஐம்பது ஆண்டுகளில், அவளுடைய அனுபவங்கள் எல்லாவற்றிலும், தேவனையோ, கிறிஸ்துவையோ, உயிர்த் தெழுதலையோ, தெய்வீக சுகமளித்தலையோ, எதைப்பற்றியுமே ஒரு முறை கூட அவள் குறிப்பிட்டதில்லை. அது ஒவ்வொன்றுமே, ஒரு விதமான களியாட்டத்தை பற்றியும், யாரோ ஓருவர் வெகு நாட்களுக்கு முன்பு செய்த முட்டாள்தனத்தை பற்றியுமே குறிப்பிட்டாள்: அதற்கு எந்த மதிப்புமே இல்லை, யாருக்குமே அது உதவாது.
ஆனால் இந்த பக்கத்தை கவனித்து பாருங்கள். அது தொடர்ந்து மனந்திரும்புதலையும், "கிறிஸ்துவிடம் வாருங்கள்" என்றும், தெய்வீக சுகமளித்தலையும், உயிர்த்தெழுதலையும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் பிரசங்கித்து வருகிறது. அதின் மதிப்பே அது என்னவாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது அது சரிதானே?
25. மேலும் பின்பு, இன்னொரு காரியம். அந்த டாலரை குறித்து உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருந்தால், அதிலிருக்கும் அந்த எண்களை எடுத்து, அதை அச்சடிக்கும் இடத்திற்கு மீண்டுமாக எடுத்து சென்று, அந்த டாலரில் இருக்கும் எண் அந்த அச்சடிக்கும் இடத்தோடு ஒத்துப்போகிறதா என்பதை கண்டறியுங்கள். அது ஒத்துப்போனால், அதை ஆதரிக்கும் உண்மையான ஒரு வெள்ளி டாலர் அங்கே இருக்கும். அது உண்மைதானே?
சரி, அவளுடைய வார்த்தையை எடுத்து, அதை வேதாகமத்திடம் கொண்டுசெல்லுங்கள், மேலும் நான் கர்த்தருக்காக செய்யும் வேலையை எடுத்து, அதையும் வேதாகமத்திடம் கொண்டு சென்று, எந்த ஒன்று சரியானது என்பதை பாருங்கள். அதுதான் அச்சடிக்கும் இடமாயிருக்கிறது, அந்த இடம்தான் நிரூபித்து காட்ட கூடிய ஒன்றாயிருக்கிறது. இது மாத்திரம் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அறிக்கை செய்யவில்லையென்றால், அவள் ஒரு சூனிய- எந்தோரை சேர்ந்த சூனியக்காரியே அன்றி வேறல்ல. அங்கே கட்சிதமாக. அவர்கள் யார் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அவர்கள் இருவரும் அங்கே அச்சடிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் தளர்வானது ...
நீங்கள் கூறலாம், "அதைபற்றி என்ன..." இங்கே என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் கூறட்டும், ஒரு நிமிடம், நாம் இதை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் என்னை ஒரு நிமிடம் அனுமதித்தால், இந்த காரியத்தை நான் ஒரு நிமிடம் நிறுத்த போகிறேன், 'ஏனெனில் உங்களிடம் நான் ஒன்றை கூறவேண்டும் என்று உணருகிறேன்.
26. இங்கே ஒரு வகுக்கப்பட்ட பாதை (channel) இருக்கிறது. இதை நான் ஜனங்களுக்கு முன்பாக கூறுவது கிடையாது. என்னுடைய சொந்த ஜீவியத்தில் எனக்கும் தேவனுக்கும் இடையே அநேக இரகசியங்களை (secrecy) நான் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கே பாருங்கள். இதுபோன்ற ஒரு வகுக்கப்பட்ட பாதை இருக்கிறது, இங்குதான் மனிதர்கள் (Mortal) ஜீவிக்கிறார்கள். அதில் மகிழ்ச்சியும், இருளும் மற்றும் பாவமும் கதம்ப கூளமாயிருக்கிறது (conglomeration). சில சமயங்களில், நீங்கள் ஒரு சிறு வெள்ளை புள்ளியையோ அல்லது ஒரு வெளிச்சத்தையோ பார்க்கிறீர்கள். இயேசு, "நீங்கள் மலை மேல் இருக்கும் விளக்காயிருக்கிறீர்கள். விளக்கை கொளுத்தி, அதை மரக்காலால் மூடிவைக்காதீர்கள்" என்று கூறினார். இந்த மனிதர்களின் பரிமாண கதம்ப கூளத்தில் (conglomeration of this dimension of mortals) இருக்கும் கிறிஸ்தவர்கள் தான் அது. சரி, இந்தவழியாக கீழேபோனால், அடுத்த பரிமாணம் என்னவென்றால், அது தேவனை அறியாமல் மரித்த அநீதியுள்ளவர்களின் ஆத்துமாக்கள் இருக்கும் பரிமாணம். இரண்டாவது பிசாசுகளுடையது. திரித்துவத்தில் மூன்றாவதாக இருப்பது பாதாளம் (hell): அநீதியுள்ள ஆத்துமாக்கள், பிசாசுகள், மற்றும் பாதாளம் (hell).
இங்கேயும் ஒரு திரித்துவம் இருக்கிறது. அவர்களில் ஒருவன் மூன்றாம் வானத்திற்குள் எடுக்கப்பட்டான்.. இங்கேயும் முதலாவது ஆவியாக இருக்கிறது: பரிசுத்த ஆவி; இரண்டாவது, தூதர்கள்; மூன்றாவது, பரலோகமாக இருக்கிறது. இப்பொழுது, இங்கிருக்கும் பரிமாணத்தில் இருக்கும் இந்த மனிதர்கள், அந்த இடத்திலிருந்தோ அல்லது இந்த இடத்திலிருந்தோ வரும் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றார்கள் (Influenced).
27. இப்பொழுது, அந்த பெண்ணிற்கு நடந்தது என்ன, இங்கிருக் கும் இந்த பரிமாணத்திற்குள்ளாக அவள் நுழைந்தாள், எந்தோரின் சூனியக்காரி செய்தது போன்று. அவள் சாமுவேலின் ஆவியை அழைத்தாள். இப்பொழுது, வேதாகமத்தில், பல ஜனங்கள் அதைப்பற்றி அதிகமாக குழம்பி, அது சாமுவேலை போன்று வேறு யாரோ ஆள்மாறாட்டம் செய்தான் என்று கூறுவதை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். ஆனால் வேதாகமமோ அது சாமுவேல் என்று கூறினது. அது சாமுவேல்தான் என்று நான் விசுவாசிக்கிறேன், 'ஏனெனில் அது சாமுவேல் என்று தேவன் தன்னுடைய வேதாகமத்தில் கூறினார்.
இப்பொழுது, பவுல் - சவுல், அவன் தீர்க்கதரிசியிடம் சென்றான். தீர்க்கதரிசி அவனுக்காக எந்த ஒரு தரிசனத்தையும் காணவில்லை. பின்பு அவன் கர்த்தரிடத்தில் ஒரு சொப்பனத்தை கேட்டான். அவனுக்கு அவர் எந்தவொரு சொப்பனத்தையும் கொடுக்கமாட்டார். பின்பு அவன் சென்று ஊரீம் தும்மீம்மிடம் பேசினான், அதுவும் அவனுக்கு பளிச்சிடவில்லை. எனவே அவன் தனக்கு மாறுவேடம் இட்டுக் கொண்டு, எந்தோரை சேர்ந்த சூனியக்காரியிடம் இரகசியமாக சென்று, "எனக்காக சாமுவே லின் ஆவியை கூப்பிடு" என்றான்.
அவள் சாமுவேலின் ஆவியை அழைத்தாள். சாமுவேல் ஏறிவந்த போது, அந்த சூனியக்காரி முகங்குப்புற விழுந்து, "தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதை நான் காண்கிறேன்" என்றாள். அது உண்மைதானே? "தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதை நான் காண்கிறேன்". அவள் பயந்தாள். இப்பொழுது, கவனியுங்கள். அங்கே சாமுவேல் தன்னுடைய தீர்க்கதரிசிக்கான சால்வைகளோடு நின்றான். அவன் அங்கே வெறுமனே சும்மா நின்றுகொண்டிருக்கவில்லை, ஆனால் அவன் சவுலை அறிந்திருந் தான். அது சரிதானே?
28. இப்பொழுது சரியாக இதில் என்னுடைய கால்வினிஸ (Calvinistic) கொள்கையை நான் சிறிது சேர்க்க கூடும், ஆனால் நான் அதை அமைதியாக வைத்துக்கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஹா.
யாரோ ஒருவர் என்னிடம் கூறினார், "சவுல் இழக்கப்பட்டான்" என்று. ஒரு மனிதன் உண்மையாகவே தேவனுடைய ஆவியால் பிறந்து, தேவனோடு நிலைத்திருக்கும்போது, அவன் இழக்கப்பட்டுப் போவதில்லை. அவன் இழக்கப்பட்டு போகவே முடியாது. ஒரு கோதுமை மணியினால் கோதுமையை தவிர வேறு எதையுமே உற்பத்தி செய்யமுடியாது. அது உண்மை. அந்த மனிதன் பின்வாங்கி போனான். அது உண்மைதான், ஆனால் அவன் இழக்கப்பட்டு போகவில்லை.
அங்கே பாருங்கள். நான் அதை சரியாக இங்கே நிரூபிக்கிறேன். கவனியுங்கள். அந்த சூனியக்காரி சாமுவேலின் ஆவியை அழைத்தாள், மேலும் சாமுவேல் சவுலை அடையாளங்கண்டு கொண்டு, "நீ ஏன் என்னிடத்தில் வந்தாய், தேவனுக்கு நீ சத்ருவான தினாலோ?" என்றான்.
இப்பொழுது, இன்னும் ஒரு நிமிடத்தில், பாப்டிஸ்டுகளாகிய நீங்கள், "ஆமென்" என்று எனக்காக உரக்க சத்தமிட வேண்டும். இப்பொழுது, அவன் ஏன்... "ஏன் - நீ ஏன் என்னை அழைத்தாய், தேவனுக்கு நீ சத்ருவானதினாலோ?"
இப்பொழுது, கவனியுங்கள். அவன் கூறினான்... சாமுவேலாக மட்டும் அங்கே நிற்கவில்லை, ஆனால் அவன் இன்னும் தீர்க்கதரிசியாய் இருந்தான். ஆமென். அவன் இன்னும் தீர்க்கதரிசியாய் இருந்தான், "நாளைய தினத்தில், நீ யுத்தத்தில் மரிக்கப் போகிறாய் (Fall), உன் குமாரனும் உன்னுடன் மரிக்க போகிறான் (Fall). மேலும் நாளை இரவு இந்நேரம் நீ என்னோடு கூட இருப்பாய்.'' அப்படியானால் சவுல் இழக்கப்பட்டிருந்தால், சாமுவேலும் இழக்கப்பட்டிருக்க வேண்டும். அது சரியா? ஹாஹ்.
29. சவுல் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஒரு பெலிஸ்தியன் அவனை கொன்றான். வேதாகமத்தை முழுமையாக படிக்கும் உங்களில் யாருக்குவேண்டுமானாலும் அது தெரியும். ஒரு பெலிஸ்தியன் அவனை கொன்றான், மேலும் அப்படி செய்ததற்காக அந்த பெலிஸ்தியனை தாவீது கொன்றான். எல்லாம் சரி. கவனியுங்கள், சவுலுக்கு காயம் ஏற்பட்டது; அது உண்மை. ஆனால் அவன்... ஒரு பெலிஸ்தியன் அவனை கொன்றான். மேலும் தாவீது அவனை கொன்றான் ஏனெனில் அவன், "தேவனால் அபிஷேகிக்கப் பட்டவனுடைய ஜீவனை எடுத்தாயே" என்று கூறினான். சவுலும் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான்.
இப்பொழுது, ஆனால் இப்பொழுது... இப்பொழுது, என் நல்ல கத்தோலிக்க நண்பனே, கருத்து வேறுபாடு கொள்ளாதே. நீ கருத்தில் வேறுபட்டால், இப்பொழுது அது நட்பின் அடிப்படையில் மட்டுமே. பாருங்கள்? இப்பொழுது, என்னுடைய ஜனங்களும் கத்தோலிக்கர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இப்பொழுது, ஒரு நிமிடம்.
இப்பொழுது, கத்தோலிக்க சபை பரிந்து பேசுதலை விசுவா சிக்கிறது அல்லது - அல்லது புனிதர்களுடன் பேசுவதை (communion of saints) - மரித்துப்போன, மரித்துப்போன ஜனங்களோடு பேசுவதை. அது முற்றிலும் ஆவிகளோடு பேசும் முறையாயிருக்கிறது (spiritualism).
மேலும் புரோடஸ்டன்ட் சபையில், அவர்களுடைய சொந்த சபையில் தயாரிக்கப்பட்டதான விசுவாச பிரமாணத்தில் (Apostle creed) (அதுபோன்ற ஒன்று வேதாகமத்தில் ஒருபோதும் இருந்ததே இல்லை), அவர்கள் புனித ரோம கத்தோலிக்க சபையை விசுவாசி க்கிறோம் என்றும் மேலும் புனிதர்களோடு பேசுவதை விசுவாசிக் கிறோம் என்றும் கூறுகிறார்கள், அது புரோடஸ்டன்டிஸத்தையும் (Protestantism) ஆவிகளோடு பேசுவதில் (Spiritualism) உள்ளே கொண்டு வருகிறது. பின்பு, தேவனுடைய ஆவி ஒரு மனிதனில் அசைவதை அவர்கள் காணும்போது, அவனை அவர்கள் ஒரு பேய் என்று கூறவே விரும்புகிறார்கள், அவர்களே அவ்வாறாக இருக்கும்போது: தங்களுடைய சொந்த பிரமாணத்தில் அதை அறிக்கை செய்கின்றார்கள்.
30. இப்பொழுது இந்த... சகோதரனே, நான் உன்னிடம் கூறுகிறேன்; நாம் எங்கே நிற்கிறோம் என்பதை காணும்படி சில நேரங்களில் நாம் தோலுரிக்கப்பட்டு, கொஞ்சம் தேய்க்கப்பட வேண்டி இருக்கிறது. நீங்கள் அவ்விதம் நினைக்கவில்லையா? சரி, சரிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த மனுஷனும்... அந்த புனிதர்கள் இப்பொழுது, நான் கத்தோலிக்க புனிதர்களை குற்றப்படுத்தவில்லை. ஆனால் பாருங்கள். அந்த எந்தோரின் சூனியக்காரியால் சாமுவேலின் ஆவியை அழைக்க முடிந்ததற்கான காரணம் என்னெவெனில் சாமுவேலினால் தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்ல முடியவில்லை; அவன் பரதீசில் இருந்தான்; ஏனெனில் காளை மற்றும் வெள்ளாட்டு கடாவின் இரத்தத்தால் பாவத்தை நீக்கிப்போட முடியவில்லை. ஆனால் இயேசு மரித்ததிலிருந்து, அவர் பாவத்தை விலக்கி, பாவத்தை நீக்கிப்போட்டார், மேலும் விசுவாசி இப்பொழுது தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்கிறான். அவனால் திரும்ப வர முடியாது என்று அந்த ஐசுவரியவானை பற்றி இயேசு லூக்காவில் பேசிய போது கூறினார். அவனால் திரும்ப வரமுடியாது. ஆகவே தேவனை தவிர, மனிதனுக்கும் தேவனுக்குமான ஒரே மத்தியஸ்தராகிய கிறிஸ்துவை தவிர, மரித்து போன வேறு எந்தவிதமான ஆவியோடு நீங்கள் பரிந்து பேசினாலும், அப்பொழுது நீங்கள் மதம் (religion) என்று அழைக்கப்படுகிற ஆவிகளோடு பேசுவதில் (spiritualism) இருக்கிறீர்கள். இப்பொழுது, ஆவிகளோடு பேசுவது (spiritualism) என்பது எங்கே இருக்கிறது? எனவே தேவனுடைய ஆவியை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதில் ஜாக்கிரதையாயிருங்கள். பாருங்கள்? புனிதர்களோடு பேசுவது என்பது ஆவிகளுடன் பேசுவதாயிருக்கிறது (spiritualism).
31. இப்பொழுது கவனியுங்கள். இங்கே பலிபீடத்தின் கீழ் இருக்கும் இந்த ஆத்துமாக்கள்... இந்த ஆத்துமாக்கள், நான் கூறுகிறேன்... இயேசு இங்கே... சில நிமிடங்களுக்கு முன்பு நான் அந்த வசனத்தை வாசித்தேன். தாவீது, அவரை எப்பொழுதுமே முன்கூட்டியே கண்டு கூறினான், "என் மாம்சமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். ஏனெனில் அவர் என் ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டார்; நான் பரிசுத்தவானை அழிவை காண விடமாட்டேன்".
அதைவிட ஒரு சிறந்த வசனம் பேதுருவில் காணப்படுகிறது. அவன் கூறினான் இயேசு, அவர் மரித்தபோது, அவர் சென்று, அந்தகார சங்கிலிகளால் கட்டப்பட்டு, நித்திய நியாயத்தீர்ப்புக்காக காத்திருக்கும் காவலிலுள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார்; அதாவது இயேசு, அவர் கல்வாரியில் மரித்தபோது, சென்று ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார், நோவாவின் நாட்களில் நீடிய பொறுமையுடன் இருந்தபோது மனந்திரும்பாமல் இருந்த அந்த அநீதியான ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார்.
32. அதை நாம் புரிந்துகொள்ளலாம். இங்கே அவர் பூமியில் நிற்கிறார். மிகவும் மகிமையான... பல நேரங்களில், நீங்கள் வேதாகமத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் வரிகளுக்கு இடையே வாசிக்க வேண்டும்.
அந்த பழைய யோபுவை குறித்து நான் சிந்தித்துப்பார்க்கிறேன், அவன் கூறியபோது... அவன் முழுவதும் பருக்களால் உடைந்து போயிருந்தான்; ஜனங்கள் வந்து எப்படியாய் கூறினார்கள்... அவனுடைய மனைவி "நீ ஏன் தேவனை தூஷித்து, ஜீவனை விடக்கூடாது?" என்றாள்.
அவன், "நீ பைத்தியக்காரி பேசுவது போல் பேசுகிறாய்" என்றான். அங்கே அவன் முழுவதும் உடைந்துபோனவனாக, சாம்பல் குவியலில் உட்கார்ந்திருந்தான்.
அதைக் குறித்து ஒருமுறை நான் மூன்று மாதங்கள் பிரசங்கித்தேன். ஒரு பெண் எனக்கு எழுதி அனுப்பி, என்னிடம் "சகோதரன் பிரன்ஹாமே, எப்பொழுது நீர் யோபுவை அந்த சாம்பல் குவியலில் இருந்து தூக்கப்போகிறீர்" என்றாள்.
நான்... அவன் தன்னுடைய பருக்களை சுரண்டிக் கொண்டிருந்தான். அந்த பெண் வாசலண்டை வந்து, அவன் கண்டிப்பாக தேவனை தூஷித்து ஜீவனை விடவேண்டும் என்று அவனிடம் கூறினாள்.
அவன், "நீ பயித்தியக்காரி பேசுவது போல் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்." என்றான்.
33. நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், யோபு மரித்தபோது, தன்னை அடக்கம்பண்ணுவதை பற்றி குறிப்பிட்டான். அதன் பிறகு ஆபிரகாம் வந்தான். வாசிப்பவர்களே, வரிகளுக்குடையே கவனியுங்கள். இது வார்த்தையில் எழுதப்படவில்லை; அதை நீங்கள் இடையில் தான் வாசிக்க வேண்டும். அது ஞானிகளுடைய கண்களுக்கும் கல்விமான்களுடைய கண்களுக்கும் மறைக்கப் பட்டிருக்கிறது. யோபு மரித்த போது, தன்னை அடக்கம் பண்ணும் நிலத்தை பற்றி அவன் குறிப்பிட்டான்.
அதன் பிறகு ஆபிரகாம் வந்தான்; சாராள் மரித்தபோது, அவன் சிறிது நிலத்தை வாங்கினான்: அதை வாங்கினான். யோபுவுக்கு பக்கத்தில், அவன் எப்படியாய் வெள்ளி சேக்களை கொண்டு அதை வாங்கினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் அவளை அடக்கம்பண்ணினான்... அவன் மரித்த போதும் - அவனும் அவளோடு கூட அடக்கம் பண்ணப்பட்டான்.
ஆபிரகாம் ஈசாக்கை பெற்றான். ஈசாக்கு மரித்தபோது, ஈசாக்கு யாக்கோபோடு நித்திரைப்பண்ணினான், அல்லது ஆபிரகாமோடு நித்திரைப்பண்ணினான். ஆபிரகாம் ஈசாக்கை பெற்றான், ஈசாக்கு யாக்கோபை பெற்றான். யாக்கோபு எகிப்தில் மரித்தான், ஆனாலும் அவன் கூறினான், "என்னை இங்கே அடக்கம்பண்ண வேண்டாம்". ஏன்? ஹா. "என்னை பாலஸ்தீனாவுக்கு கொண்டு சென்று அடக்கம் பண்ணுங்கள்". ஏன்? "அந்த குகையில் என் பிதாக்களோடு என்னை அடக்கம்பண்ணுங்கள்."
34. யாக்கோபு யோசேப்பை பெற்றான்; கிறிஸ்துவுக்கு பரிபூரண மான மாதிரியாயிருந்தான், என்பதை நாம் அறிவோம். நல்லது, யோசேப்பு மரிக்கும்போது, அவன், "என்னுடைய எலும்புகளை இங்கே புதைக்க வேண்டாம்" என்று கூறினான். ஏன்? அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தான். அவர்களில் மற்றவர்கள் யாரும் காணாததை அவன் முன்கூட்டியே கண்டான். அவன், "என்னை பாலஸ்தீனாவுக்கு கொண்டு சென்று, என் பிதாக்களண்டையில் என்னை அடக்கம்பண்ணுங்கள்" என்றான்.
மோசே, நானூறு வருடங்கள் கழித்து, யோசேப்பின் எலும்புகளை கொண்டு சென்று, பாலஸ்தீனாவிலே புதைத்தான். ஏன் என்று நான் வியக்கிறேன்.
யோபு, "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்" என்று கூறினான். அதாவது தேவன் பூமியின் மேல் நிற்பார் என்றும், அவன் அவரை பார்ப்பான் என்றும் கூறினான்.
ஆபிரகாம் கூறினான், "யோபு அவரை பார்க்கப்போகிறான் என்றால், நானும் அவனோடு கூட அடக்கம்பண்ணப்பட போகி றேன், ஆகையால் நானும் அவரை பார்ப்பேன். நான் சாராளையும் அங்கே அடக்கம் பண்ணுகிறேன்". அவர்கள் எல்லாரையும் அங்கே அடக்கம் பண்ணினார்கள், ஏனெனில் உயிர்த்தெழுதலின் முதற்பலன் எகிப்திலிருந்து வெளியே வராது; அது பாலஸ்தீனாவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
அந்த காரணத்தால்தான் இன்றைக்கு, நான் கூறுகிறேன் உங்களுக்கு வேண்டிய எல்லா கேளிக்கைகளையும், உலகத்தையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை, உயிர்த் தெழுதலின் போது தேவன் அவரோடு கூட கொண்டுவருவார். எனவே கிறிஸ்துவுக்குள் என்னை அடக்கம் பண்ணுங்கள், ஏனெனில் அங்கிருந்துதான் உயிர்த்தெழுதல் வரப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். உங்கள் இஷ்டம் போல என்னை நீங்கள் எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம்: ஒரு பரிசுத்த உருளை என்று, எனக்கு அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது, ஏனெனில் நான் கிறிஸ்துவுக்குள் அடக்கம் பண்ணப்பட்டு, உலகத்திலிருந்து மறைந்திருக்கிறேன். அங்கிருந்துதான் உயிர்த்தெழுதல் வரபோகிறது உலக காரியங்களுக்கு மரித்து ஆவியில் பிறந்த கிறிஸ்தவர் களிடமிருந்து: உலகத்திற்கு பைத்தியமாக, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவர்களிடமிருந்து. வேதாகமம் கூறுகிறபடி அவர்கள் தான் உயிர்த்தெழுதலில் வரப்போகிறார்கள். அது உண்மை. சகோதரனே, வரிகளுக்கு இடையில் வாசியுங்கள்.
35. கவனியுங்கள். என் மனைவி எனக்கு கடிதம் எழுதும்போது, அவள் கூறுவாள், "அன்பான பில், இன்ன - மற்றும் - இன்ன... அவள் கூறுவதை நான் வாசிப்பேன், பின்பு வரிகளுக்கு இடையே இருப்பதை நான் வாசிப்பேன்; 'ஏனெனில் நான் அவளை நேசிக்கிறேன் மேலும் அவள் எதைப்பற்றி பேசுகிறாள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒருமுறை அவரை நேசித்து பாருங்கள். காரியத்தை தள்ளிப்போடவோ அல்லது வாதிடவோ முயற்சிக்காதீர்கள், சற்றே அவரை நேசித்துப்பாருங்கள், நீங்கள், அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். வேதப்பாட சாலைகளில் இருந்து அதை மறைத்து, கற்றுக்கொள்ள விருப்பமுள்ள பாலகர்களுக்கு அதை வெளிப்படுத்துகிறார். அது உண்மை என்று நிரூபிக்கபட்டிருக்கிறது. உங்களுக்கு இருபது, ஓ, உங்களுடைய வாதத்தை நிரூபிக்க ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தது, உலகத்தில் இன்னும் மூன்றில் இரண்டு பங்கு;கூட இயேசு கிறிஸ்துவை பற்றி கேள்விப்படவே இல்லை அந்த அளவுக்கு நீங்கள் தோற்றுப்போயிருக்கிறீர்கள்.
தேவனுடைய ஆவியால் பிறந்து, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, தேவனுக்காக அனலாய் இருக்கும் ஐநூறு நபர்களை என்னிடம் தாருங்கள், முழு சபையும் இரண்டாயிரம் ஆண்டுகளில் செய்ததை காட்டிலும், நான் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக ஒரே ஆண்டில் அதிகம் செய்துகாட்டுகிறேன். அது சரி. அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் விசுவாசிப்பவர்களை, உண்மையாயிருப்பவர்களை, பாவனை விசுவாசிகளை அல்ல, ஆனால் உண்மையாய் தேவனுடைய ஆவியால் பிறந்தவர்களை. அது உண்மை. நமக்கு தேவை என்னவென்றால், அது தேவனுடைய திட்டமே. எல்லாம் சரி, இப்பொழுது ஒரு நிமிடம். இந்த காரியங்களை நாம் புரிந்துகொள்வோம்.
36. இயேசு மரித்த போது, அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார். அவர் கன்னிப் பிறப்பில் பிறந்த தேவனுடைய குமாரன் என்பதை நான் விசுவாசிக்கிறேன். யேகோவா தேவன் ஒரு சிறு கன்னிகையின் மீது நிழலிட்டு, எந்த மனுஷனையும் அறியாததற்கு முன்னமே ஒரு இரத்த அணுவை மரியாளின் கருவில் சிருஷ்டித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது வளர்ச்சியடைந்தது, பிறந்தது, தேவனுடைய குமாரனாயிருந்தது, மேலும் யேகோவா கீழே வந்து தன்னுடைய குமாரனில் வாசம்பண்ணினார். தேவன் பூமியில் இருந்தார் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கபடுகிற ஒரு மனிதனுக்குள் இருந்து நம்மோடு வாசம் பண்ணினார். இதை மட்டும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை என்றால், நீங்கள் இழக்கப் பட்டிருக்கிறீர்கள். அது உண்மை.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு நாத்திகன் என்னுடன் வாதிட்டான், "பிரசங்கியாரே, மனுஷனை அறியாமலே ஒரு பெண்ணால் குழந்தை பெற முடியும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?" என்றான்.
நான், "ஆம், ஐயா" என்றேன்.
'அது அப்படி இருக்க முடியாது. ருக்கவே முடியாது" என்றான். "அது எல்லா அறிவியல் விதிமுறைகளுக்கும் எதிராயிருக்கிறது. ஒரு உண்மையான ஆண் பெண் தொடர்பு இல்லமால் சோளத்தில் மகரந்த சேர்க்கை கூட நடக்காது, எதிலுமே நடக்காது" என்றான்.
நான், "அது உண்மையா?" என்றேன். நான் "உங்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா அதாவது மேரி... இயேசுவுக்கு தாய் இருந்தார்கள் என்று?
'ஆம்".
"ஆனால் தேவன் அவருக்கு பிதாவாயிருப்பதற்கு சாத்தியமே இல்லை".
"தேவன் என்று ஒன்றுமே இல்லை" என்றான்.
"அந்த மகத்தான சிருஷ்டிப்பின் மகத்தான ஆவியால் அந்த இரத்த அணுவை சிருஷ்டித்து இருக்க முடியாது என்று நீங்கள் கூறுகிறீர்களா?'
'இல்லை, அப்படியென்று ஒன்றுமே இல்லை. அவளுக்கு யோசேப்போடு தொடர்பு இருந்தது, இப்பொழுது நமக்கிருப்பது போன்று ஒரு சிறு தவறு நடந்துவிட்டது. அதிலிருந்து அவர்கள் ஒரு மார்க்கத்தை ஆரம்பித்துவிட்டனர்."
நான், "அப்படியானால், ஐயா, உங்களிடம் நான் ஒன்றை கேட்கவேண்டும். முதல் மனிதன் எங்கிருந்து வந்தான், அவன் ஒரு தலைபிரட்டையாகவோ, குரங்காகவோ அல்லது நீங்கள் கூற விரும்பும் எதுவாக வேண்டுமானாலும் அவன் இருக்கட்டும்? முதல் மனிதன், அவன் எங்கிருந்து வந்தான், அவனுடைய அப்பா அம்மா யார்? உங்களுடைய கூற்றின் படி, அவன் பிறப்பதற்கு முன்பு அவனுக்கு அப்பா அம்மா இருக்க வேண்டுமே, பின்பு எங்கிருந்து முதல் மனிதன் வந்தான்: அவன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்? " அது சரி.
அங்கிருந்து பதினைந்து நிமிட தூரத்தில் ஒரு பழைய பைன் மரத்தின் கீழ் (அன்றொரு நாள் நானும் சகோதரன் வுட்டும் (Wood) கடந்து சென்ற இடத்தில்), அவரை நான் கிறிஸ்துவிடம் வழி நடத்தினேன். ஆமென். அவரால் பதில் கூற முடியவில்லை. நிச்சயமாக முடியாது. அவர்களுடைய கூற்றின்படி, அவனுக்கு அப்பா அம்மா என்கிற தொடக்கம் இருந்திருக்க வேண்டும். ஆகவே எங்கே அவன் யாராயிருந்தான்? முதலில் இருந்தவர்களை படைத்தது யார்?
ஓ, அவர்கள்... தடுப்புக்கு (prohibition) (அமெரிக்கா தடுப்பு சட்டம் -- ஆசி] எதிராக பில்லி சண்டே கூறியது எனக்கு பிடிக்கும். "பட்டினியால் மரித்த கோழியின் நிழலால் செய்யப்பட்ட சூப்பை விட அவர்களுடைய வாதங்கள் மிகவும் லேசானது". இப்பொழுது, அந்த அளவிற்கு அதில் சாரமே இல்லை. அது சரி. நிற்பதற்கென்று அவர்களுக்கு கால்கள் ஏதும் இல்லை. இல்லை, ஐயா. தேவன் இருக்கிறார், தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவராயிருக்கிறார். அது சரி.
37. இப்பொழுது, கவனியுங்கள். இயேசு கல்வாரியில் மரித்த போது, அவர் கூறினார்... அவர்தான் தேவனுடைய குமாரன் என்பதை பூமியில் இருந்த ஒவ்வொன்றும் அறிந்திருந்தது. தேவனும் அவர் தன்னுடைய குமாரன் என்று கூறினார். அவர் வானங்களை அனைத்ததால்; பூமி முழுவதும் இருளானது. தன்னுடைய சொந்த குமாரன் மரிப்பதை அவரால் பார்க்க முடியவில்லை, அச்சமயத்திலும் அவருடைய குமாரன் தன்னுடைய இரத்தத்தை பாவமன்னிப்புக்காக அளித்துக் கொண்டிருந்தார்.
ரோம நூற்றுக்கு அதிபதி தன்னுடைய கையை தன் இருதயத்தின் மீது வைத்து, "மெய்யாகவே அவர் தேவனுடைய குமரன்தான்" என்றான்.
யூதாஸ் காரியோத்து கூறினான், "குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்தேன்." பூமி, அவர் தேவனுடைய குமாரன் என்பதை கூறியது; அவர் மரித்தபோது, ஒரு பெரிய பூகம்பத்தினால் அது பாறைகளை உருண்டோட செய்தது. ஒவ்வொன்றும் அவர் தேவனுடைய குமாரன் என்பதை அடையாளங்கண்டு கொண்டது. ஓ, என்னே. நான் இதை ஆரம்பித்திருக்க கூடாது, ஜெப வரிசை நடக்கபோகிறது, ஆனால் இப்பொழுது நான் மிகவும் நன்றாக உணருகிறேன்.
38. அவரை கவனியுங்கள்! என்னை ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள், இந்த சில பழங்காலத்திய சோள வெள்ளப் பாகை யும், ஹிக்கரி மரப்பட்டையில் சுடப்பட்ட பன்றியின் பின்னந் தொடையையும் உங்களால் பொறுத்துக்கொள்ள முடிந்தால். கவனியுங்கள். கீழே வந்து, தேவனுடைய குமாரன் மேலிருந்து கீழே இறங்கி வந்து, "உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்" என்று கூறி, ஆவியை விட்டார். மேலும் அவர் சென்று காவலிலுள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார் என்று வேதாகமம் கூறினது. ஆமென். அது என்ன? திருமதி. பைப்பர் சென்ற இடத்தில் இருக்கும் இந்த நபர்கள், பேழை ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், நோவாவின் நாட்களில் தேவனுடைய நீடிய பொறுமையின் போது மனந்திரும்பாத காவலிலுள்ள ஆத்துமாக்கள்.
39. என்னால் அவரை காண முடிகிறது. இதை நாம் நாடக வடிவில் சித்தரிப்போம். இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் இருக்கும் இந்த முதலாம் பரிமாணத்திற்குள் அவர் இறங்கி வருவதை நான் காண்கிறேன். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறு முறை தட்டுகிறார் --ஆசி]. அந்த கதவை தட்டினார். அந்த கதவை திறந்தார். அந்த அழுதுகொண்டிருந்த திரளான அழகிய பெண்கள், அவலட்சணமான சூனியக்காரிகள், ஆண்கள், என எல்லாரும் கத்தி கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்: வேதனையினால். 'ஓ, என்னால் மட்டும் இங்கிருந்து வெளியே போக முடிந்தால்...
அவர் அந்த கதவை தட்டினார்; அந்த கதவு அப்படியே திறந்தது. அங்கே ஜீவிக்கிற தேவனுடைய குமாரன் விண்ணின் சாயலில் (celestial body) நின்றார். "தன்னுடைய பத்தாயிரம் பரிசுத்தவான்களுடன் வருவார் என்று ஏனோக்கு கூறிய அந்த தேவனுடைய குமாரன் நான்தான். நோவா ஒருவரை பற்றி பேசினானே அந்த ஒருவர் நான்தான். ஏதேன் தோட்டத்திலிருந்து வந்த ஸ்திரீயின் வித்து நான்தான். இப்பொழுதுதான் வானங்கள் என்னை பற்றி சாட்சிக்கொடுத்தது. பூமி என்னைப் பற்றி சாட்சி கொடுத்தது. யூதாஸ் என்னை பற்றி சாட்சி கொடுத்தான். ரோம சேவகன் என்னை பற்றி சாட்சி கொடுத்தான். பிதா என்னை பற்றி சாட்சி கொடுத்தார். இப்பொழுது, தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்காக நான் இங்கே இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டும்." என்று கூறினார். அல்லேலூயா.
ஒவ்வொரு பிசாசும் அவர் அங்கே இருந்ததை அறிந்திருந்தது. ஓ, அவர் பூமியில் இருந்தபோது அவைகள் கத்தி கூச்சலிட்டு, "நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், தேவனுடைய பரிசுத்தர்" என்று கூறினது. பிரசங்கிமார்கள் அறியாவிட்டாலும், அவைகள் அவரை அறிந்திருக்கின்றன. அவர் யார் என்பது அவைகளுக்கு தெரியும்.
மேலும் அதன்பின் அவர்கள் "எங்களை வெளியே விடும்" என்று கத்தினார்கள்.
அவர், "நீங்கள் ஏன் மனந்திரும்பவில்லை" என்று கூறினார், படார் என்று கதவு அடைப்பட்டது. பிசாசுகளுக்கு அடியில் கீழே இருக்கும் இடத்திற்கு அவர் சென்றார். அந்த பிசாசியலின் வரிசை முழுவதிலும், அவைகள் கத்தி கூச்சலிட்டு பின்னே ஒதுங்கின. தாங்கள் எங்கே சென்றோம் என்பதை அவைகள் அறிந்திருந்தன. அவர் அவைகளை துரத்தியபோது பிசா - கதிரேய தேசத்து மனிதனிலிருந்து அந்த பிசாசுகளை துரத்தியபோது, அவைகள் பன்றிகளுக்குள் சென்று, தங்களை மாய்த்துக்கொண்டன. அந்த பரிசுத்தரின் பிரசன்னம் வருவதை, அந்த இடத்தினூடாக நடந்து வருவதை அவைகள் கண்டன. கோடைக் காலத்தின் போது, ஆப்பிளின் நடுபாகத்தில் கரப்பான் பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கிற வேளையில், விளக்குகள் போடப் படும்போது ஒரு கூட்ட கரப்பான் பூச்சிகள் ஓடி ஒளிவதுப்போல அவைகள் ஒளிந்தன. சில பிரசங்கிகளின் சிந்தையிலே என்னை வையுங்கள், நீங்கள் சுவிசேஷ விளக்கை போடும்போது, அவர்கள் சிதறிவிடுவார்கள். "அதை கேட்க அங்கே செல்லாதே". கோடைக் காலத்தில் அந்த பழைய பெரிய கூட்ட கரப்பான்பூச்சிகளின் சிந்தையிலே என்னை வையுங்கள். இருளிலே அவைகளால் துரிதமாக செல்லமுடியும், ஆனால் ஒருமுறை விளக்கை போட்டுப்பாருங்கள். அது உண்மை. எல்லாம் சரி.
40. அவர் செய்த அடுத்த காரியம், அந்த திரித்துவத்தின் அடுத்த இடத்திற்கு அவர் கீழே வந்தார், கீழே பாதாளத்திற்குள் வந்தார். அவர் அந்த கதவண்டை செல்வதை என்னால் காண முடிகிறது. (சகோதரன் பிரன்ஹாம் கதவை தட்டுவது போல ஏழு முறை தட்டுகிறார் ஆசி]. சாத்தான் கதவண்டை நடந்து வந்து, "ஓ. கடைசியாக நீ இங்கே வந்துவிட்டாயா, வந்து விட்டாயா?" என்றான்.
"ஆம், நான் இங்கே இருக்கிறேன்"
ஆபேலை கொன்றபோது நான்--நான் உன்னை கொன்றேன் என்று நான் நினைத்தேன். ஆபேலை பிடித்தபோது நான் உன்னை பிடித்தேன் என்று நினைத்தேன். தானியேலை நான் சிங்க கெபியில் தூக்கிபோட்டப்போது உன்னை நான் பிடித்தேன் என்று நம்பினேன். யோவானை நான் சிரச்சேதம் செய்தபோது, உன்னை அப்பொழுது நான் பிடித்துவிட்டேன் என்று நினைத்தேன். சரி, நீ சிலுவையில் இருந்தபோது, உன்னை நான் பிடித்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக நீயே வந்துவிட்டாய்."
இயேசு, "ஆம், நான் வந்திருக்கிறேன். ஒரு நோக்கத்திற்காக நான் வந்திருக்கிறேன்; நீண்ட நாளாக ஜனங்களின் மீது நீ பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறாய். அதை ஜெயங்கொள்ளவே நான் கீழே இறங்கி வந்திருக்கிறேன்" என்று கூறினார். அது உண்மை. ஓ, "நான் கன்னி பிறப்பில் பிறந்த தேவனுடைய குமாரன்" என்று அவர் கூறினார்.
'ஓ, எனக்கு உரிமை இருக்கிறது; ஆதாம் பாவம் செய்தான்."
"ஆனால் அந்த பாவத்திற்கு விலைக்கிரயத்தை செலுத்திய என்னுடைய இரத்தம் சிலுவையில் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. ஆம், ஐயா. ஜெயங்கொள்ளவே நான் கீழே இறங்கி வந்தேன். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை என்னிடம் கொடு". இராஜ்ஜியத்திற்கான திறவுகோல்களை அவர் பேதுருவிடம்: சபையிடம் கொடுத்துவிட்டார். ஆம், ஐயா. "மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை என்னிடம் கொடு" என்று அவர் கூறினார். நீங்கள் கவனியுங்கள், அவர் உயிர்த்தெழுந்தபோது, அவர் அவைகளை தன் இடுப்பில் தொங்கவிட்டிருந்தார். "மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை என்னிடம் கொடு" என்றார். கையை நீட்டி சாத்தானின் கழுத்தை இழுத்து பிடித்து, [சகோதரன் பிரன்ஹாம் சித்தரித்துக்காட்டுகிறார் --ஆசி] அவனை கீழே தள்ளி, தன்னுடைய பாதத்தை அவன் மீது வைத்து; கையை நீட்டி அவைகளை எடுத்துக்கொண்டார். "நீண்ட நாட்களாக நீ ஜனங்களை ஏமாற்றி வந்தாய். உன்னுடைய இடம் எதுவோ அங்கேயே நீ திரும்ப போ" என்றார். அவைகளை தன் இடுப்பில் தொங்க விட்டார். "இப்பொழுது நான்தான் தலைவன் (Boss). பாவ மன்னிப்புக்காகவும், வியாதிகளை நீக்குவதற்காகவும் என்னுடைய இரத்தமானது அங்கே சிலுவையில் சிந்தப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் அவர்களை உன்னால் பிடித்துவைக்க முடியாது. என்னை விசுவாசிக்கும் ஜனங்கள் அங்கே இருப்பார்கள். அவர்களை உன்னால் வியாதியால் கட்ட முடியாது. அவர்களை உன்னால் பயத்தால் கட்டமுடியாது. அவர்கள் விசுவாசிப்பார்கள்." அல்லேலூயா. மரணத்திற்கும் பாதாளத்திற் குமுரிய திறவுகோல்கள்...
41. இதோ அவர் ஏறி வருகிறார். சகோதரனே, அது விடிந்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே அந்த பெரிய விடிவெள்ளி நட்சத்திரம் கல்லறையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அது மூன்றாம் நாளாகிக்கொண்டிருந்தது. அல்லேலூயா. முதல்...
பொறுங்கள். அவருக்கு இங்கே பரதீசில் வேறு யாரோ இருக்கிறார்கள். ஆகவே அவர் யாரையும் மறப்பதில்லை. "என்னை கடந்து செல்லாதேயும், ஓ தெய்வீக இரட்சகரே, என் தாழ்மையான கூக்குரலுக்கு செவிக்கொடும்."
இங்கே பரதீசில் சில ஆத்துமாக்கள் படுத்திருக்கின்றன: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சாராள், மேலும் தீர்க்கதரிசிகளின் வாக்குத்தத்தங்களை விசுவாசித்து அவருக்கு விசுவாசமாயிருந் தவர்கள் இருக்கிறார்கள். ஒரு நிழலாட்டமாக அல்லது அவருடைய சொந்த இரத்தத்தித்திற்கு மாதிரியாயிருக்கும் காளை மற்றும் வெள்ளாட்டுக்கடாக்களின் இர-இரத்தத்தோடு மட்டும் அவர்கள் அங்கே படுத்து காத்திருக்கின்றார்கள். அவர் பரதீசிக்கு ஏறி செல்வதை என்னால் காண முடிகிறது, [சகோதரன் பிரன்ஹாம் ஐந்து முறை தட்டுகிறார் - ஆசி]. கதவை தட்டினார். ஆபிரகாம் கதவை திறந்தான். "நீங்கள் யார்?"
அவர், "நான் ஆபிரகாமின் வித்தாயிருக்கிறேன்" என்றார்.
தானியேல் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, "என்ன? கைகளால் பெயர்க்கபடாமல் அந்த மலையிலிருந்து உருண்டு வர நான் கண்ட அந்த கல்லா" என்றான்.
எசேக்கியேல் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, "பார்ப்பதற்கு மேகங்கள் அவர் பாதத்தில் தூசியாகும் அளவுக்கு அவர் அவ்வளவு வேகமாக வருவதை நான் கண்டேன்" என்றான். ஓ, என்னே.
அந்த தீர்க்கதரிசி கூறியதை என்னால் கேட்க முடிகிறது, "அந்த நதியை கடப்பதற்கு முன்னர் அவரோடு நான் இரவு முழுவதும் போராடினேன்" என்றான். அல்லேலுயா.
42. யோவானும், மற்றவர்களும் அவரை அடையாளங்கண்டுக் கொண்டார்கள். கூறினார், "எல்லாம் சரி, சகோதரர்களே, உங்களு டைய அரையை கட்டிக்கொள்ளுங்கள், உயிர்த்தெழுதல் அருகிலி ருக்கிறது. அங்கே அந்த அந்த கல்லறைகள் திறப்பதற்கு இன்னும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. உங்களுக்காக என் நீதியான இரத்தம் அங்கே சிந்தப்பட்டிருக்கிறது. பிதாவினு டைய பிரசன்னத்திற்குள் உங்களை கொண்டு செல்ல முடியாத அந்த காளை மற்றும் வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தத்தின் கீழ் நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள். ஆனால் அதை நீக்கிப்போடும் படி நான் என்னுடைய இரத்தத்தை சிந்தியிருக்கிறேன். இப்பொழுது, நாம் வீட்டிற்கு போகும் பாதையில் இருக்கிறோம். வாருங்கள், நீங்களும் ...
ஆபிரகாம், "சாராள், இங்கே வா" என்று கூறி, அவளுடைய கரத்தை பிடித்துக்கொண்டான். ஆபிரகாம் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, "என் ஆண்டவரே..." என்றான்.
அவர், "சொல், என் ஊழியக்காரனே, உனக்கு என்ன வேண்டும்" என்றார்.
"எருசலேமில் சிறிது நேரம் நாம் நிறுத்தலாமா, நானும் சாராளும் மிக அதிகமாக சுற்றி திரிந்த அந்த பழைய நகரத்தில் இருக்கும் இடத்தை நான் காண விரும்புகிறேன்" என்றான்.
"நிச்சயமாக, மேலே நான் என் சீஷர்களோடு நாற்பது நாட்கள் பகலும் இரவும் இருக்கப்போகிறேன், அவர்கள் செல்வதற்கு முன்பு நான் அவர்களுக்கு இன்னும் சிலவற்றை போதிக்கவேண்டும். எல்லாம் சரி. நாம் கொஞ்ச நேரம் அங்கே நிறுத்தப்போகிறோம்."
சரியாக அந்த நேரத்தில் தேவ தூதன் அந்த கல்லை புரட்டினான். பூமி முழுவதும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அவருக்குள் நித்திரையடைந்த பல பரிசுத்தவான்களின் சரீரங்கள் உயிர்த்தெழுந்து, கல்லறையை விட்டு, அவருடைய மகிமையான சரீரத்தை போன்றே அழிவில்லாத சரீரங்களாக வெளியே வந்தது என்று வேதாகமம் கூறியது என்ன?
43. காய்பா நின்றபடியே கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, "ஆசாரியர்களே, இன்று காலையில் கேட்ட அந்த சத்தம் எல்லாம் என்னது?"
ஆசாரியர்கள் கூறினார்கள், "எனக்கு தெரியாது. ஒரே ஒரு காரியம் என்னவென்றால், இங்கிருக்கும் இந்த பட்டணத்தை சுற்றி ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் காட்சியளிக்கிறார்கள். அவர்களில் சிலர் தாங்கள் உயிர்த்தெழுந்த பழைய பரிசுத்தவான்கள் என்று உரிமை கோருகிறார்கள். "
"சரி," காய்பா கூறுகிறான், "எனக்கு தெரியவில்லை." கூறினான், "அங்கே வருகின்ற அந்த இளஞ்சோடிகள் யார்?" என்றான்.
நான்... அது சாராளும் ஆபிரகாமும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள், "தேனே, அங்கே பார். தூரத்தில் இருக்கும் அந்த மலையின் மேலிருந்து நாம் கீழே வந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா?" என்றான்.
"ஆம், எனக்கு நினைவிருக்கிறது.''
என்னே... ஓ, ஒ. நாம் கவனிக்கப்படுகிறோம்." அவருக்கு இருந்த சரீரம் போலவே அவனுக்கும் இருந்ததால் அவன் சற்றே மறைந்து போனான், கட்டிடத்தின் சுவர்களுக்குள்ளாக சென்று விட்டான். அவர்கள் அதை அறியக்கூடவில்லை... அவருடைய சொந்த மகிமையின் சரீரம். அவர்கள் இங்கே பூமியில் நடந்து, ஜனங்களுக்கு காட்சியளித்தார்கள். அல்லேலூயா. ஆம், அதுதான் உங்களுடைய நாற்பது நாட்கள். அல்லேலூயா.
என்னை மன்னியுங்கள். இல்லை, என்னை மன்னிக்க வேண்டாம். நான் அதை கூறவில்லை. இல்லை. சகோதரனே, முறைமை என்று எதுவும் இல்லை; தேவன் ரூபம் இல்லாதவராயிருக்கிறார்.
44. உங்களிடம் நான் ஒன்றை கூறட்டும். நாற்பது நாள் கழித்து, ஒரு நாள் அவருடைய பாதம் மண்ணிலிருந்து உயர ஆரம்பித்தது. அவர் தன்னுடைய சீஷர்களிடம் கூறினார், "உலகமெங்கும் போய்; சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசிக்கிறவன் ஆக் கினைக்குள்ளாக தீர்க்கப்படமாட்டான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்." குறி சொல்லுகிறவன் என்று உங்களை அழைக்கப்போகிறார்கள்; பிசாசு என்று உங்களை அழைக்கப்போகிறார்கள்; அவர்கள் எதுவாயெல்லாம் இருக்கி றார்களோ அதையெல்லாம் வைத்து உங்களை அழைப்பார்கள்; ஆனால் நீங்கள் பிசாசுகளை துரத்தப்போகிறீர்கள்". ஆமென். "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்."
இதோ அவர் மேலே போகிறார். சாராளும் ஆபிரகாமும், அவர்கள் அனைவரும், அவரோடு கூட இணைந்து கொள்வதை என்னால் காண முடிகிறது. ஓ, என்னே. இதோ அவர்கள் மேலே போகிறார்கள்; சந்திரனை தாண்டி, நட்சத்திரங்களை தாண்டி. இயேசு முன்னே செல்ல, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவருக்கு பின்னே நடந்து சென்றார்கள். அல்லேலுயா. அவர்கள் அங்கே தூரத்தில் இருக்கும் சதுரமாக கட்டப்பட்டிருந்த அந்த பெரிய மகத்தான நகரத்தின் முகப்பில் வந்தார்கள்: முத்துக்களினால் செய்யப்பட்ட வாசல்கள். மகத்தான ஜெயவீரரை, மகத்தான வெற்றி வீரரை தங்களுக்கு முன்னே நடப்பவராக கொண்டிருந்த அந்த எல்லா பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஓ, அந்த திரைச்சீலையை இரண்டாக கிழித்தது முதல் அவர் மகத்தான ஜெயவீரராக இருக்கிறார்.
45. இதோ அவர் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடு இருக்கிறார். அவர்கள் "உயர்த்துங்கள், அநாதி கதவுகளே உயருங்கள். மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்" என்று மகா சத்தமிட்டு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
தூதர்கள், "அது என்ன?" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
"உயர்த்துங்கள், அநாதி கதவுகளே உயர்த்தப்படுங்கள். மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்"
தூதர்கள்,"யார் இந்த மகிமையின் இராஜா" என்று சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.
"அவர் சேனைகளின் கர்த்தரானவர், யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவர். அவரே மகிமையின் இராஜா". அல்லேலூயா.
நெஞ்சை விரித்தவாறு காபிரியேல் அங்கே நடந்து வந்து, பொத்தானை அழுத்துவதை என்னால் காண முடிகிறது: கதவுகள் திறக்கின்றன. வெற்றி வாகை சூடியவராய், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடு வீதிகளில் இயேசு சென்றார், வீதிகளினூடாக...?... அல்லேலூயா. ஜெயம். நேராக பிதாவின் பிரசன்னத்திற்குள் நடந்து சென்று, "பிதாவே, தோ இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த நேரத்திற்காக காத்திருந்து மரித்தார்கள்". என்றார். அல்லேலூயா.
அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, "நல்லது, என் குமாரனே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்படியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்." ஓ, அல்லேலூயா.
ஓ, நான் அரைமணி நேரம் தாமதித்துவிட்டேன். நான் அங்கே தாமதமாக இருக்க விரும்பவில்லை. அவர் ஒவ்வொரு சத்துருக்களையும் அவருக்கு பாதப்படியாக்கிப் போடுகிறார். எல்லா பிசாசுகளும் அவருடைய பாதத்தின் கீழ் இருக்கிறது. எல்லா வியாதிகளும் அவருடைய பாதத்தின் கீழ் இருக்கிறது. எல்லா பாவமும் அவருடைய பாதத்தின் கீழிருக்கிறது. மேலும் நாம் அவரில் இருக்கிறோம், நம்மை நேசித்த அவரின் மூலமாக நாம் ஜெயவீரர்களை காட்டிலும் மேலானவர்களாக இருக் கிறோம்.
46. இப்பொழுது, ஒரு விசுவாசி மரிக்கும்போது, அவன் நேராக தேவனுடைய பிரசன்னத்திடம் செல்கிறான். யோவான் பத்மு தீவில், கூறினான், "பலிபீடத்தின் கீழ் இருந்த ஆத்துமாக்கள் மகா சத்தமிட்டு, "எதுவரைக்கும் கர்த்தாவே? எதுவரைக்கும்?"
"அவர்கள் இன்னும் சிலரை 'பரிசுத்த உருளை' என்று அழைக்கும்வரைக்கும் மேலும் அவர்களை அங்கே மேலும் கீழுமாக பொருத்தும்வரை, மேலும் நீங்கள் பட்ட அதே பாடுகளை அவர்களும் படும்வரை." அப்பொழுது அவன் பார்த்த போது, அவர்கள் வருவதை அவன் கண்டான், திரளான ஜனங்கள் அவர்களை எந்த மனுஷனாலும்... எந்த மனுஷனாலும் எண்ண முடியாத ஒரு திரளான ஜனக்கூட்டம்: வெள்ளையங்கி தரித்த பரிசுத்தவான்கள், குருத்தோலைகளைப் பிடித்து எதிர்நோக்கி யிருந்தார்கள். அவன், "யார் இவர்கள்?" என்றான்.
கூறினான், "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் இருந்து, துன்பத்திலிருந்து வந்தவர்கள், வந்து தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். அவருக்கு முன்பாக அவர்கள் பகலும் இரவும் இருக்கிறார்கள்." அவர்களோடுகூட நானும் எண்ணப்பட விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? உங்களுக்கு தெரியுமா, நான்...
நான் இயேசுவை காண விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா?
47. அதை செய்யவே நான் விரும்புகிறேன். என்னுடைய பூமிக்குரிய பயணம் முடியும்போது, என் கடைசி பாடல், என் கடைசி பிரசங்கம் மேலும் இந்த வேதாகமம் எங்கேயோ மூடி வைக்கப் பட்டிருக்கும்போது, படுக்கையின் (bed) அருகில் நான் நின்று பார்க்கும்போது, அங்கே என் மகனும் என்னுடைய மகள்களும், என் மனைவியும், நான் நேசித்தவர்களும் அங்கே நின்றிருப்பார்கள். நான் என் கையை உயர்த்தி பாடவிரும்புகிறேன்:
இன்ப நாள், இன்ப நாள்,
இயேசு என் பாவங்களை கழுவி நீக்கியபோது.
எப்படி விழித்திருந்து ஜெபித்து,
ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து ஜீவிக்க வேண்டும்
என்பதை அவர் எனக்கு போதித்தார்.
இந்த பழைய கட்டிடத்தில் இங்கே அது விரிசல் விடும்போது நான் நழுவி செல்ல விரும்புகிறேன். நான் அதை இங்கேயே போட்டுவிட விரும்புகிறேன்:
இந்த மாம்சமாகிய அங்கியை கீழே போட்டு விட்டு நான் எழும்பி,
நித்திய பரிசை கைப்பற்றுவேன்.
ஆகாயத்தில் கடந்து செல்லும்போது ஆர்ப்பரிப்பேன்,
"பிரியும் நேரம், பிரியும் நேரம், ஜெபத்தின் இனிமையான நேரம்".
48. தேவனுடைய கிருபையால், அந்த நாளில் அவருடைய பிரசன்னத்தில் நான் நின்று இன்றிரவு இங்கிருக்கும் உங்களில் ஒவ்வொருவரையும் சந்திக்க முடியுமென்று விசுவாசிக்கிறேன். மேலும் அவருடைய மகத்தான மாட்சிமையின் ஜீவனில் அவருடைய மகத்தான பிரசன்னத்தில், தூதர்களின் சேனைகளின் பிரசன்னம் சுற்றியிருக்க, நான் அங்கே நிற்கும்போது, உங்களுடைய இருதயத்தில் இருக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர் அறிவார்... ஓ, என்னால் அவரிடம் நடந்து சென்று கூற முடியும், "என் கர்த்தாவே, நான் செய்வதற்கென்று நீர் எனக்கு கொடுத்ததை வைத்து எனக்கு சிறந்ததை நான் செய்தேன். ஒரு ஞானதிருஷ்டிக் காரனாயிருக்கும்படியான ஒரு தெய்வீக வரத்தை நீர் எனக்கு அளித்தீர். எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்தேன். என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நான் உம்முடைய வார்த்தையை பிரசங்கித்தேன். மேலும், கர்த்தாவே, இவர்கள் பின்பற்றினார்கள்". ஓ, என்னே, என்ன? என்னால் அவருடைய பாதத்தையாகிலும் தொடமுடிந்தால், ஒருவேளை அவர் நடந்து சென்ற இடத்தை முத்தமிட்டுவிட்டு, திரும்பி வந்துவிட்டால்... உங்களுடைய அரண்மனைகளை எல்லாம் தாண்டி எங்கோ ஓர் இடத்தில் ஒரு சிறிய மரத்தால் ஆன அறையை (log cabin) அவர் எனக்கு கட்டித்தருவார். நான் மகிழ்ச்சியாயிருப்பேன்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு அவர் இங்கே இருக்கிறார். நான் அவரை உரிமை கோருகிறேன். அவர் என்னுடைய ஆண்டவர். அவர் உங்களுடைய ஆண்டவர். அவர் எனக்கு சுகமளிப்பவர். அவர் உங்களுக்கு சுகமளிப்பவர். நான் எதை பேசுகிறேனோ அதை நான் அறிந்திருக்கிறேன். அவர் இங்கே இருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தலாம்.
சகோதரியே, ஒரு நிமிடம் நீங்கள் பியானோவிடம் வருவீர்களா? நண்பர்களே, பிரசங்கிக்க வேண்டுமென்று நான் எண்ணம் கொள்ளவில்லை. அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.
49. எங்கள் பரலோக பிதாவே, நல்லது, என்னை மன்னியும் கர்த்தாவே. நீர் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டீர்; நாம் ஏன் தவறாக புரிந்துக்கொள்ளப்படக்கூடாது? அது நம்மை தொல்லை ப்படுத்தாது. அப்படிதான் நாங்கள் இருப்போம் என்று நீர் கூறினீர், ஆகவே நாங்கள் அவ்வாறே இருக்கிறோம். அந்த நிந்தையை எங்களால் சுமக்க முடிவதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், அந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு நீர் அளித்ததற்காக நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். இந்த ஜனங்களை நீர் ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இங்கிருக்கும் அவர்களில் அநேகர் வியாதியுள்ள வர்களாயும் தேவையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.
கர்த்தாவே, சுவிசேஷத்தை அவர்களுக்கு அளிப்பதை காட்டிலும் எனக்கு வேறு எதையுமே செய்யத் தெரியாது, நீர் கூறியதை நான் அவர்களிடம் கூறினேன். மேலும் நீர் கொடுத்த உம்முடைய தெய்வீக வரத்தைக் கொண்டு, இன்றிரவு நீர் செய்தால்... நான் செய்தால், அங்கே பிரசங்கிக்கையில், தவறு செய்தால், நீர் என்னை மன்னியும். மேலும் தேவனுடைய மகத்தான தூதனை என் பக்கத்தில் நிற்கும்படி, எனக்கு உதவி செய்யும்படி, அந்த மகத்தான வரம், தேவனுடைய சித்தத்தின்படி அவருடைய ஊழியக்காரனைக் கொண்டு ஊழியம் செய்யும்படி தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து அனுப்பப்படும் ஊழியம் செய்கிற ஆவியை, தூதனை நீர் அனுப்பவேண்டுமென்று நான் ஜெபிக்கி றேன். அவர் தன்னுடைய இரகசியங்களை தன்னுடைய தீர்க்கதரிசிகளுக்கு தெரியப்படுத்துகிறார் என்று நீர் கூறி இருக்கிறீர். அவருடைய ஊழியக்காரர்கள் அக்கினி ஜூவாலைகளாயிருக் கிறார்கள்.
இன்றிரவு நீர் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். எல்லா எதிர்ப்புகளையும் நிர்மூலமாக்கும், மேலும் உம்முடைய ஆவி அன்போடும் இனிமையோடும் வந்து எங்கள் எல்லோரையும் ஒருசேர ஆசீர்வதிக்கட்டும். இதை நாங்கள் கிறிஸ்துவின் நாமத் தில் கேட்கிறோம். ஆமென்.
50. நீங்கள் பயபக்தியாய் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நாம் ஜெபித்தோமானால், நீங்கள் அமர்ந்திருக்கிற இடத்திலேயே, தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கூட்டத்தை ஆரம்பிப் பதற்கு முன்பு சிலநேரங்களில் ஜனங்கள் என்ன சிந்திப்பார்கள் என்று நான் நான் வியப்பதுண்டு. உங்களில் அநேகர் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்: உங்களுக்கு ஒரு ஜெப வரிசை தேவையாயிருக்கிறது; அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். இப்பொழுது, அதுதான் உண்மை.
இப்பொழுது, சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, என்னுடைய கூட்டங்களில் அது வேலை செய்யாது. அது அவ்வளவுதான். ஜெபவரிசையே அதற்கு தேவைப்படுகிறது. இப்பொழுது, அது என்னவென்பதை பற்றி அறிய நான் அதை பற்றி குறிப்பிட்டவுடனே, அந்த தடங்கல் நீங்கியது. பாருங்கள்? இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொள்வதற்காக ஜெபவரிசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். எல்லாம் சரி.
நீங்கள் சில ஜெப அட்டைகளை கொடுத்திருக்கிறீர்களா? அவை என்ன? 'U' க்களா. எத்தனை? ஒன்று முதல் நூறு வரையா. எல்லாம் சரி. நாம் செய்யவேண்டும்... நம்மால் எல்லாரையும் அழைக்க முடியாது. அவர்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து, வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்க வேண்டும். இப் பொழுது, தேவன்... வழக்கமாக பிரசங்கிக்கும்போது, ஏன், அது ஒருவிதத்தில் adu வேறுவிதமான அபிஷேகமாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய ஜெபங்களில் என்னை நினைவுகூர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஜெப அட்டைகள் U. U. ஜெப அட்டை U ... [ஒலிநாடாவில் காலியிடம் -- ஆசி].
51. --இரவு. சீமாட்டியே, நாம் அன்னியர்களா? எனக்கு உங்களை தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது: இந்த உலகில் எந்த விதமான தொடர்பும் இல்லை? அவர்... இதற்கு முன் ஒருபோதும் என்னைக் கண்டதில்லை. எல்லாம் சரி, அது நம்மை முற்றிலும் அன்னியர்களாக்குகிறது. சரி, இப்பொழுது, நீங்கள் வியாதியாயிரு ந்தால், பின்பு நீங்கள் இங்கே உதவிக்காக என்னிடத்தில் வந்திருக்கிறீர்கள். மேலும் அந்த உதவியானது தேவனிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் நீங்கள் என்னை உங்கள் சகோதரனாக விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா... நீங்கள் எப்பொழுதாவது கர்த்தருடைய தூதன் எனக்கு காட்சியளித்ததை பற்றிய அந்த சிறிய செய்தி புஸ்தகத்தை வாசித்து இருக்கிறீர்களா? எப்பொழுதாவது அதை வாசித்து இருக்கிறீர்களா? அதை ஒருபோதும் வாசித்ததில்லையா, அப்படியே வந்து விட்டீர்கள். சரி, அப்படியானால் தேவன் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வார்.
இப்பொழுது, நம்முடைய கர்த்தராகிய இயேசு இங்கே நின்றிருந்தால், அவருக்கு உங்களை தெரியும், அவருக்கு தெரிந்தி ருக்கும்தானே? நீங்கள் இதுவரை செய்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருப்பார். ஆகவே அதை உங்களிடம் கூற முடியும். சரி அப்படியானால், எனக்கு நீங்கள் அன்னியராயிருக்கையில், அவர் ஒருவேளை, தன்னுடைய பரிசுத்தமான இராஜாதிபத்திய கிருபையால், உங்களை பற்றி ஏதோவொன்றை நான் அறிந்திட செய்தாரென்றால், கிணற்றண் டையிலிருந்த ஸ்திரீயை போல அல்லது யாரோடு அவர் பேசினாரோ அதுபோல, அப்பொழுது நீங்கள் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்வீர்கள், ஏற்றுக்கொள்வீர்கள் தானே? ஏதோவொரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் இங்கிருந்து அதை செய்யவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அறிவீர்கள் தானே? அது இயற்கைக்கு மேம்பட்ட வளத்திலிருந்து (resource) வருகிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது - அப்பொழுது அது இயற்கைக்கு மேம்பட்டதில் இருந்து வருகிறது என்பதை அறிவீர்கள். ஆனால் அப்பொழுது அதைப்பற்றின உங்களுடைய மனோபாங்கை (attitude) பொறுத்தே உங்களுடைய சுகமளித்தல் தீர்மானிக்கப்படும். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா?
தேவன் அவர் எப்பொழுதும் இருந்தது போலவே இப்பொழுதும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் மாறாதவர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. இப்பொழுது, உங்களுக்கு உங்களுக்கு ஒரு - ஒரு - ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது அது - அது உங்களை தொல்லைப்படுத்துகிறது.மேலும் உங்களுக்கு பெண்களுக்கான கோளாறும் இருக்கிறது. அந்த பரிசோதனை நிரூபித்தது, அதில் ஒரு கட்டி (cyst) இருக்கிறது என்று அவர் கூறினார் என்று நான் நம்புகிறேன். அது சரியா? அது உண்மையா? சரி அப்படியானால், அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்றால், நான் உங்களை அறியாமல், ஆனால் அந்த மனிதன் உங்களிடம் கூறியதை கேட்டும் கண்டுமிருந்தால்; நீங்கள் வீட்டில் எப்படி இருந்தீர்கள் மற்றும் அதுபோன்றவைகளை கண்டிருந்தால்; அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனாயிருக்கிறது. அது உண்மை தானே? பின்பு அந்த அதே ஆவியால் நான் உங்களிடம் கூறுகி றேன், இப்பொழுது நீங்கள் இயேசுவை உங்களுக்கு சுகமளிப் பவராக ஏற்றுக்கொண்டால், நீங்கள் வீடு சென்று சுகமாவீர்கள். நீங்கள் அதை செய்வீர்களா? அப்படியானால் தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக; நான் ஜெபிக்கட்டும்.
பரலோக பிதாவே, எங்களுடைய சகோதரியை நீர் ஆசீர் வதிக்கவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், மேலுமாக அவள் வீடு சென்று, "வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்கிற உம்முடைய மகத்தான வார்த்தைகளை நினைவுகூர்ந்து சுகமாகட்டும். இதை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறேன். ஆமென். இப்பொழுது, சகோதரியே, களிகூர்ந்தபடியே, மகிழ்ச்சியாக, நீங்கள் சுகம் பெற்றதற்காக தேவனுக்கு நன்றி கூறியபடியே செல்லுங்கள்.
52. எல்லாம் சரி, ஐயா, வாருங்கள். இப்பொழுது, இங்கிருப் பவர்களில் எத்தனை பேர், முதல் முறையாக, உங்களுடைய முழு இருதயத்தோடும் இப்பொழுது விசுவாசிக்கிறீர்கள்? "சகோதரன் பிரன்ஹாமே, இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபிக்க அதுவே எனக்கு போதுமானது" என்று கூறுபவர்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? "நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. உங்களில் இருக்கும் ஒவ்வொருவரும், அது புதிதாய் வந்தவர்களாயிருக்கிறது. இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இப்பொழுது, நான்... நண்பர்களே, நான் ஒரு சுகமளிப்பவன் அல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். என்னால் யாரையும் சுகப்படுத்த முடியாது. என்னால் முடிந்தால், நான் நிச்சயமாக... நான் இங்கே இருந்து இந்த முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட சகோதரியை பார்க்கையில், நான் நிச்சயமாக கீழே சென்று அவளை சுகப்படுத்துவேன். அவளுடைய பிரச்சனை என்னவென் பதை நான் அறிவேன். அவளுடைய கோளாறு எங்கே இருக்கிறது என்பதை நான் அறிவேன். இந்த பெண்ணும் அதே போன்றுதான் இருக்கிறாள் என்பதை நான் அறிவேன். இவர்கள் இருவருமே முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அது சரி. அது கொஞ்ச நாட்களாகவே இருக்கிறது. அங்கே ஒரு சிறிய நிழல் உங்களை பின்னால் பிடித்திருக்கிறது என்பதை நான் அறிவேன். உங்களால் மட்டும் அந்த சிறிய நிழலை எப்பொழுதாவது கடந்து வரக்கூடு மானால், அங்கிருந்து நீங்கள் எழுந்து கட்டடத்தை விட்டு வெளியே நடந்து சென்று விடுவீர்கள். அது சரி. உங்களால் கூடுமானால்... ஆனால் என்னால் உங்களை அந்த நிழலுக்கு மேலாக தூக்க இயலாது; உங்களுடைய சொந்த ஆவியே உங்களை அவ்வாறு தூக்க வேண்டும். அவ்வளவுதான். அது வெறும் ஒரு சிறிய... நீங்கள் நினைக்கலாம், "சரி, நான் இப்படிப்பட்ட ஒரு நிலையிலிருக்கிறேன், என்னால் - என்னால் சற்றே..." பாருங்கள்? அப்படி நினைக்க வேண்டாம். ஒரு பல் வலியை சுகமாக்குவது போலவே தேவனால் உங்களையும் சுகமாக்க முடியும். [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.]... அதில் ஏறிக்கொள்ளுங்கள். எல்லாம் சரி.
53. ஐயா, என்னை பொறுத்துக்கொள்ளுங்கள். என்னை- என்னை மன்னிக்கவும். நீங்கள் ஒரு நோயாளி, நோயாளிதானே? சரி. சிலநேரங்களில் அவ்வாறு பேசும்போது, நான் - எனக்கு முன்பாக ஜனக்கூட்டம் இருக்கிறது என்பதை நான் அறிவேன், அது என்னை உணரவைக்கிறது அதாவது நான்... அந்த அபிஷேகம், நான் அதற்குள் மிக அதிக தூரம் சென்று விட்டால், அப்பொழுது அது என்னை வேதனைபடுத்துகிறது. நீங்கள் அறிவீர்களா? அப்பொழுது நான்... தரிசனங்கள் நகர ஆரம்பிக்கும், மேலும் சரியாக எதை செய்யவேண்டும் என்றே எனக்கு - எனக்கு தெரியாது.
இப்பொழுது, நீங்கள் இல்லையா... நீங்கள் ஒரு விசுவாசி; இப்பொழுது நான் அதை காண்கிறேன், அதாவது நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று. இப்பொழுது, நான் அதை அறிந்ததால், அதாவது நான் உங்களுடைய ஆவியை பிடித்த மாத்திரத்தில், உங்களுடைய ஜீவன் வரவேற்பு கொடுப்பது போல் இருக்கிறது. ஏதோவொன்று மிக அருகில் இருக்கிறது என்பதை நீங்கள் நன்கு உணருகிறீர்கள். அது... நீங்கள் எப்பொழுதாவது அந்த தூதனுடைய படத்தை செய்திதாளில் பார்த்திருக்கிறீர்களா? பாருங்கள்? இதோ அது நம்மிடம் இருக்கிறது. அவர்கள் அதை அறிவியல் பூர்வமாக எடுத்துள்ளார்கள். சரியாக அதுதான் நமக்கு அருகில் இருக்கிறது.
நீங்கள் ஒரு ஊழியக்காரர் நீங்கள் ஒரு ஊழியக்காரர், நீங்கள் ஒரு மெத்தோடிஸ்ட் பிரசங்கியார். அது சரிதானே? உங்களுடைய பெயர் ஒபானியன். அது சரிதானே? நீங்கள்... அவர்கள் உங்களை ஹாவர்ட் என்றழைப்பார்கள், அவர்கள் அழைப்பார்கள் தானே? சகோதரன் ஹாவர்ட்? அது - அது தான் உங்களுடைய பெயராயிருக்கிறது. மேலும் நீங்கள் - நீங்கள் ஏதோ ஒருவிதமான பெருங்குடல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் அல்லது அங்கே உள்ளே- உள்ளே -- உள்ளே. அது சினப்பை (rash) ஏற்படுத்தியிருக்கிறது உங்களுடைய... ஒருவிதமான வெளியே வருவதை போன்று (breaking out). அது உண்மையல்லவா?
உங்களுக்கு மனைவியிருக்கிறாள் சில வருடங்களுக்கு முன்பு அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அல்லது கொஞ்ச காலத்திற்கு முன்பு. அது பித்தப்பை. அது சரிதானே? அது ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது,
ஏற்படுத்தியது, இப்பொழுது அவளுக்கு இருதய ஆஸ்துமா இருக்கிறது. ஐயா, அந்த காரியங்கள் உண்மையா? அவைகள் உண்மையா? அது உங்களிடம் என்ன கூறியது என்பதை நான் அறியேன், ஆனால் அதுதான் உண்மையா? அது உண்மைதான். எல்லாம் சரி. இங்கிருக்கும் ஏதோவொன்று அதை அறிந்திருக்கிறது. அது சரிதானே? அது கர்த்தருடைய தூதனாயிருக்கிறது. பாருங்கள்? என் சகோதரனே, அவரால் உங்களை சுகமாக்க முடியும்.
எங்கள் பரலோக பிதாவே, எங்களுடைய சகோதரனை நீர் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். அன்பான தேவனே, அவரை சுகமாக்கும். மேலும் அவருக்கு இருக்கும் பிரச்சனைகள், அவை என்னவாயிருந்தாலும், இன்றிரவோடு முடிந்து போகட்டும், ஏனெனில் அவர் பயபக்தியாய் வந்து, உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறார், அதாவது அவர் வாக்களித்தபடியே அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், இன்றிரவு தன்னுடைய சபையில் அவர் ஜீவிக்கிறார் என்றும் விசுவாசித்திருக்கிறார். நான் ஆசீர்வதிக்கும் என் சகோதரனை தேவனே ஆசீர்வதியும்; இவருடைய சுகமளித்தலுக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... உங்கள் வழியில் செல்லுங்கள். பாருங்கள்? தேவன் உங்களோடு இருப்பாராக.
54. எல்லாம் சரி. பில்லி அல்லது சகோதரன் வுட், இவர் அந்த நோயாளியா? சகோதரியே, நீங்கள் விசுவாசியா? என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அல்லது அவருடைய பிரசங்கி என்று, அல்லது... நான் அதை பிடித்துவிட்டேன். ஆவிதான் (Spirit) அதை கூறுகிறது (பரிசுத்த ஆவிக்கு மட்டுமே ஆங்கிலத்தில் capital S' உபயோகிக்கப்படும். மற்ற ஆவிகளை குறிப்பிடும்போது அது small s'ஆக இருக்கும். - ஆசி) உங்களுக்கு புரிகிறதா? நானாகவே, அதை கூறும்படி நான் அக்கறை கொள்ளவில்லை. பாருங்கள்? ஆனால் உங்களுக்கு உதவி செய்ய தேவன் இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனிடமிருந்து வரும் தெய்வீக வெளிப் பாடு இல்லாமல் அல்லது ஒரு தரிசனம் இல்லமால் என்னால் உங்களுக்கு எந்த உதவியுமே செய்ய முடியாது. மேலும் அப்படி செய்யும்போது, ஏன், ஒருவேளை என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். உங்களிடம் பல கோளாறுகளை நீங்கள் கொண்டி ருக்கிறீர்கள். ஒரு காரியத்தினால் உங்களுக்கு கீல்வாதம் இருக்கிறது. இன்னொரு காரியத்தினால் உங்களுக்கு இருதய கோளாறு இருக்கிறது. மற்றொரு காரியத்தினால் உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கிறது. மேலுமொரு காரியத்தினால் உங்களுக்கு சிறுநீரக பிரச்சனையிருக்கிறது. அது உண்மையா? நான் காண்கிறேன், மருத்துவரோ அல்லது வேறுயாரோ உங்களுடன் பேசிக் கொண்டிருப்பது போன்றிருக்கிறது. என்னால் அதை சரியாக காண முடியவில்ன
ஒரே ஒரு நிமிடம். உங்களுடன் நான் மீண்டும் பேச விரும்பு கிறேன். நான் காணாத ஏதோவொன்று அங்கே சம்பவித்தது. நீங்கள்... நான் உங்களுடன் மீண்டுமாக பேச விரும்புகிறேன், அந்த ஸ்தீ - அந்த ஸ்திரீயோடு பேசியது போன்று... ஓ, அவர் இங்கே இருக்கிறார். ஓ, உங்களிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது, ஒருவிதமான உங்களுடைய உங்களுடைய தொண்டையை நெரிப்பது போன்று. சில நாட்களுக்கு முன்பு, நீண்ட வருடங்களாக உங்களுக்கு இருந்த மூச்சுகுழாய் பாதிப்பே அதை ஏற்படுத்தியது. அது சரிதானே? நீண்ட நாட்களுக்கு முன்பு, மேலும் அது ஒரு... இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? அதிகமான தரிசனம், அது என்னை மிகவும் பலவீனப்படுத்துகிறது. உங்களுடைய சுகமளித்தலை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீ ர்களா?
கர்த்தாவே, இவளை சுகமாக்கும், பிதாவே. இவள் மீது நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், இன்றிரவு இவள் இங்கிருந்து சென்று முழுவதுமாக சுகமடையட்டும். இதை நான், கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது என்னவாயெல்லாம் இருந்ததோ அதெல்லாம் உண்மை, அது உண்மைதானே? அது உண்மையாயிருந்தால், இப்பொழுது சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகத்தை பெறுங்கள்.
55. எல்லாம் சரி, வாருங்கள், சீமாட்டியே. உங்கள் முழு இருதயத் தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு உதவி செய்யும் படி தேவன் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
ஐயா, நீங்கள் எதற்காக அழுகிறீர்கள்? நீங்கள் அழுது கொண்டிருக்கையில். அந்த ஆண் சுரப்பியில் (prostate) இருக்கும் கோளாரில் இருந்து தேவன் உங்களை சுகப்படுத்த வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்புகிறீர்களா? காலூன்றி எழுந்து நில்லுங்கள். இப்பொழுதே உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுங்கள். வீட்டுக்கு செல்லுங்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் அந்த ஆண் சுரப்பி கோளாறு உங்களை விட்டு நீங்குவதாக.
என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, உங்களுக்கு அடிப்பட்டிருக்கிறது... அது உங்கள் கழுத்திலும் மேலும் உங்கள் காலிலும். நீங்கள் - நீங்கள் ஒரு ஒரு ஒரு காற்றோட்ட இரும்புகூண்டினுள் (register) அல்லது ஏதோவொன் றினுள்ளோ விழுந்துவிட்டீர்கள். அது உண்மையல்லவா? நீண்ட காலத்துக்கு... உங்களுக்கு அடிப்பட்டது... உங்களுடைய பிரச்சனை சரியாக உங்கள் முதுகில் இருக்கிறது. இழுத்துபிடிக்கும் நரம்பே (strained nerve) அதை இங்கேயும் அங்கேயும் அப்படி செய்கிறது. அந்த காரியங்கள் உண்மையா? நீங்கள் விரும்பினால், ஜனங்களுக்கு அதை தெரியப்படுத்துவீர்களா: அது உண்மையா? உண்மையா? அதில் ஒவ்வொன்றுமே? சரி, அவர் உங்களிடம் என்னவெல்லாம் கூறினாரோ, அது நானல்ல. அது என்னுடைய குரல்தான், ஆனால் அது நான் வேறெங்கோ இருந்தேன், உங்களை வேறெங்கோ பார்த்தவாறு. எனக்கு அது தோன்றுகிறது; எனக்கு நிச்சயமாக தெரியவில்லை; ஆனால் ஏதோவொன்று உங்களுக்கு சம்பவித்தது போன்று எனக்கு தோன்றுகிறது. அது சரியா? நீங்கள் விழவில்லையா அல்லது விழுந்து அல்லது அல்லது ஏதோவொன்றிற்குள் விழுந்தீர்களா? உஹ்-அஹ். அது உண்மைதானா? அப்படியானால் நான் உண்மையைத்தான் கூறினேன் என்று தேவன் உறுதிப்படுத்துகிறார். மேலும் இதோ இதுதான் உண்மை. கல்வாரியில் மரித்தபோதே இயேசு உங்களை சுகப்படுத்திவிட்டார். இப்பொழுது அதை நீங்கள் ஏற்றுக்கொள் கிறீர்களா? இங்கே வாருங்கள்.
உம்முடைய வார்த்தையின் உறுதிப்பாட்டிற்காக, ஓ தேவனே, உம்முடைய குமாரன், இயேசு கிறிஸ்து கூறியதை நிறைவேற்றும்படி, என் சகோதரியின் மீது நான் கைகளை வைக்கிறேன், தான் பிரசன்னத்தில் நின்றிருப்பதாக அவள் நம்புகிறாள், தன்னு டைய சகோதரனுடைய பிரசன்னத்தில் அல்ல, ஆனால் யெகோவா தேவனுடைய பிரசன்னத்தில் நின்றிருப்பதாக அவள் நம்புகிறாள். மேலும் உம்மிடம் ஜெபிக்கிறேன், தேவனே, அவளுடைய விசுவா சத்திற்காக அவளை ஆசீர்வதிக்கும்படி, அவள் சென்று சுகமாக இருக்கட்டும்; உம்முடைய குமாரன் இயேசுவின் நாமத்தால், நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது சென்று சாட்சி பகருங்கள். அது என்னவாகிறது என்பதை நாங்கள் கேட்கட்டும்...
56. வாருங்கள், சகோதரியே. இப்பொழுது, உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பயபக்தியாயிருங்கள். தரிசனங்கள்... அது - அது உங்களை வேடிக்கையாக உணரவைக்கும். என்னுடைய உதடுகள் அவ்வளவு தடிமனாகவும் என்னை முழுவதுமாக மூடியது போன்றும் உணருகிறது. இப்பொழுது, தயவு செய்து நகராதீர்கள். ஒரு நிமிடம் அப்படியே தரித்திருங்கள். நான் கொஞ்சம் நிதானமாகி கொள்ளும் வரை ஜெபத்தில் இருங்கள். நீங்கள் எல்லாரும் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு இங்கிருந்து தன்னுடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் - நான் ஜெபிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கும்படி அவர் செய்யவில்லையென்றால், நான் முயற்சி செய்வதில் என்ன பலன்?
சகோதரியே, ஒரு நிமிடம் என்னைப் பாருங்கள் அப்பொழுது என்னாலும் உங்களை பார்க்கமுடியும். சற்றே பயபக்தியாயிருங்கள், நான் உங்களுடன் பேச வேண்டும், சற்றே... பாருங்கள்? நான் எப்படி ஒரு மனித இனமாயிருக்கிறேனோ அதுபோலவே நீங்களும் -- நீங்களும் ஒரு மனித இனம். அறிந்துக் கொள்ளும்படியாகவும் காணும்படியாகவும் நான் உங்களுடைய ஆவியை பிடிக்க வேண்டும் மேலும்... ஆனால் நீங்கள் நீங்கள் வேறு யாரோ ஒருவருக்காக நின்றுகொண்டிருக்கிறீர்கள். அது உங்களுடைய அம்மாவுக்காக, கூட்டத்திற்கு வர முடியாத ஒரு வயதான பெண் அவள். மேலும் வயிற்றில் ஏதோ கோளாறு இருக்கிறது.
அது... ஓ, அந்த - ஓ அந்த மருத்துவர்... அது ஒரு புற்றுநோய். அந்த அந்த பெண் மரித்துக்கொண்டிருக்கிறாள். சென்று "எனக்காக நில்" என்று அவள் உங்களிடம் கேட்டுக்கொண்டாள். நீங்கள் வாசலை கடந்த போது, தன்னுடைய இடத்தில் நீங்கள் நிற்கும் படியாக அவள் உங்களிடம் கூறியதை என்னால் காண முடிகிறது. சீமாட்டியே, அது உண்மையா?
எங்கள் பரலோக பிதாவே, உம்முடைய ஆசீர்வாதத்தை அவளுக்கு அனுப்பும். நான் இந்த ஏழ்மையான பெண்ணை ஆசீர்வதிக்கையில், சுகமளிதலுக்காக அவளுடைய வேண்டுகோள் எதுவாயிருந்தாலும், கர்த்தாவே, அதை அவளுக்கு அருளும்; உம்முடைய குமாரன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நான் இதை கேட்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. `செல்லுங்கள், நீங்கள் விசுவாசிக்கிறபடியே உங்களுக்கு ஆகக்கடவது. அந்த விதத்தில் தான் அது நடக்கும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறுவோமாக.
57. சீமாட்டியே, வாருங்கள். விசுவாசத்தோடிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சீமாட்டியே, எல்லாம் சரி. நீங்கள் என்னை ஒரு நிமிடம் இப்படியாக பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி கூறுவதற்கு எனக்கு தகுதியில்லை, என்னுடைய ஜீவியத்தை குறித்து நான் வெட்கப் படுகிறேன், என்னுடைய ஜீவனை குறித்து நான் வெட்கப் படுகிறேன், அவருடைய ஊழியக்காரன் என்று சொல்லக்கூட; ஆனால் இருந்தபோதும், அவருடைய கிருபையின் மூலமாக, அவர் என்னை தன்னுடைய ஊழியக்காரனாக்கி, என்னுடைய கரங்கள் பிரதிபலிக்கும்படியாக... அவருடைய பரிசுத்தமான கரங்களை பிரதிபலிக்க என்னுடைய கரங்கள் பரிசுத்தமற்றது என்பதை பார்க்கும்போது, எப்படி என்னுடைய கரங்களால் அவருடையதை பிரதிபலிக்க முடியும். ஆனால் யாருடைய கரங்கள் பரிசுத்தமாயிருக்கும்? நாம் அனைவரும் பாவத்தில் பிறந்து, துர்குணத்தில் உருவாக்கப்பட்டு, பொய் பேசுகிறவர்களாக உலகிற்கு வந்தோம்.
இப்பொழுது, ஒரு நிமிடம். அங்கே ஜனக்கூட்டத்தில் இருக்கும் இந்த பெண்ணிடம் ஒரு பிசாசு கத்திக்கொண்டிருக்கிறது. சரியாக அங்கிருக்கும் அந்த பெண்ணிடம், உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது, சீமாட்டியே, உங்களுக்கு இல்லையா? உங்களுக்கும் இருக்கிறது, உங்களுக்கும் இல்லையா? ஆஸ்துமா. எல்லாம் சரி. உங்கள் காலூன்றி நில்லுங்கள். அது சரி. கருப்பு நிற கோட் அணிந்திருக்கும் சீமாட்டியே, எழுந்து நில்லுங்கள். அது சரி. இப்பொழுது நீங்கள் இருவரும், வீட்டிற்கு சென்று, சுகமாகுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாமத்தில், செல்லுங்கள்.
"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறலாம். கூறுங்கள்... எல்லாம் சரி. அந்த பிசாசுகள் ஒன்றை ஒன்று அழைப்பதை நான் உணர்ந்தேன்.
58. இப்பொழுது, சீமாட்டியே வாருங்கள். உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசியுங்கள். அந்த சிறுநீரக (kidney) கோளாரை ஜெயங் கொண்டு, வீட்டிற்கு சென்று சுகமாக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? "என்னை சுகமாக்கியதற்காக, கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். தேவன் இவளை ஆசீர்வதித்து, இவளை சுகமாக்க வேண்டுமென, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, நீர் இதை அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். ஆமென்.
சீமாட்டியே, வாருங்கள். அவளிடம் "சீறுநீரக கோளாறு" என்று நான் கூறியது விசித்திரமான காரியமாக இல்லையா. ஏனெனில் உங்களுக்கும் அதே பிரச்சனைதான். "கர்த்தாவே, என்னுடைய சுகமளித்தலுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே செல்லுங்கள். இதை நான் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். எல்லாம் சரி.
சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எதை சேர்ந்தவள், ஏமிஷா (Amish)? மேலும் நீங்கள் மிகவும் இனிமையாயிருக்கிறீர்கள். கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்களுடைய விசுவாசத்தை நான் பாராட் டுகிறேன். போர்ட் வேயின், இந்தியானாவில், உங்கள் ஜனங்களில் அநேகர் அங்கிருந்து சுகம் பெற்றார்கள். ஒரு ஏமிஷ் ஊழியக்காரர் எனக்கு திருமணம் செய்துவைத்தார். உங்களுடைய பற்று பாரட்டப்படுகிறது.
நீங்கள் அவதிப்படுகிறீர்கள்... நான் உங்களை காண்கிறேன், குறிப்பாக ஒரு அறையில் ஒரு சாயங்கால நேரத்தில் ஏதோவொன்று சம்பவிக்கிறது... ஓ, ஆம், நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருமுகிறீர்கள். அது ஒரு ஆஸ்துமா பாதிப்பு. அது சரிதானே? இரவில் தூங்கும்போது, உங்களால் தூங்கவே முடிவதில்லை அது மிகவும் கஷ்டப்படுத்துகிறது. அது சரியல்லவா ஒரு - ஒரு அறையில் அங்கே நீங்கள் தனியாயிருந்தீர்களா? இப்பொழுது, தேவன் அது அது உண்மையென்பதை அறிவார். இப்பொழுது நீங்கள் சுகமாக போகிறீர்கள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் முன்னே வருகையில், சகோதரியே, உங்களுக்கு உதவி செய்யும்படியாக நான் தேவனிடம் கேட்கிறேன்?
சர்வவல்லமையுள்ள தேவனே, வானங்களையும், பூமியை யும் சிருஷ்டித்தவரே, உம்முடைய நாமத்தால் நான் ஆசீர்வதிக்கும், இந்த சிறிய பெண்ணை ஆசீர்வதியும், இந்த இரவு முதல் இவள் சுகமடைந்து, இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் மேலும் எல்லா நோய்களையும் குணமாக்குகிற ஒரு மகத்தான சுகமளிப்பவர் என்கிற இந்த செய்தியை இவளுடைய ஜனங்களுக்கு கொண்டு செல்வாளாக. இதை நான் அவருடைய நாமத்தில் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சிறிய சகோதரியே. களிகூர்ந்தப்படியே, விசுவாசித்த படியே, உங்களுடைய வழியிலே சென்று, சுகமாகுங்கள்.
59. எல்லாம் சரி. சீமாட்டியே, வாருங்கள். அது ஒரு பயங்கரமான பிசாசு. அது உங்களை எல்லா நேரங்களிலும் மயக்கத்திலும் மனமுடைந்து போனவளாகவும் வைத்திருக்கிறது. அது சக்கரை வியாதி. நீங்கள் பாருங்கள்? ஆனால் உங்களை அதிலிருந்து தேவனால் சுகமாக்க முடியும். இப்பொழுது உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்றிருக்கிறது, அது அப்படியாக ஒரு வெள்ளை இரத்தம் போல் சொட்டுகிறது. பாருங்கள்? ஏனெனில் அந்த அளவை குறைத்து வைத்துக்கொள்ள இன்சுலின் மருந்துகளையும் மற்றவைகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. தேவன் உங்களை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா, உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்கிறீர்களா?
ஓ இயேசுவே, தேவனுடைய குமாரனே, இப்பொழுதே இந்த ஓ பரிதாபமான ஆத்துமா கல்வாரியினிடத்தில் வந்து, அங்கே கல்வாரியில் இருக்கும் அந்த பரிசுத்த இரத்தத்திலிருந்து, இரத்தம் மாற்றம் செய்துகொள்ளட்டும் (blood transfusion) மேலுமாக இவள் ஜீவிக்கும் நாளெல்லாம் இன்னொரு மருந்தை எடுக்காமலிருப்பாளாக. ஓ, இவளுக்கு இந்த ஆசீர்வாதம் வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது சென்று களி கூருங்கள். மகிழ்ச்சியாக செல்லுங்கள். நீங்கள் பின்னாக செல்ல விரும்புகிறீர்களா அல்லது நீங்கள் விரும்பும் எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாம் சரி.
60. சீமாட்டியே, வாருங்கள். தேவன் பேசி உங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்று கூறினால், உங்களுடைய சுகமளித்தலை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்; நீங்கள் அதை என்னிடம் வாக்களிக்கிறீர்களா? சரி, உங்களுடைய கருப்பையில் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது, அது பெண்களுக் கான பிரச்சனை அது வெளியே தள்ளுகிறது (discharge). அது சரியல்லவா? எல்லாம் சரி, சற்றே... இப்பொழுது சரியாக திரும்பி சுகமாகுங்கள். சற்றே திரும்பி "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். அல்லது இந்த வழியாக செல்லுங்கள், நீங்கள் விரும்பும் எவ்வழியிலும் செல்லலாம். "உமக்கு நன்றி" என்று கூறுங்கள்.
அவளிடம் அதை நான் கூறியது ஒரு விசித்திரமான காரிய மாக இல்லையா? ஏனெனில் நீங்களும் அதே பிரச்சனையினால் தான் அவதிப்படுகிறீர்கள், மேலும் அது அவளை விட்டு நீங்கிய அதே நேரத்தில் அது உங்களையும் விட்டு நீங்கியது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சென்று உங்களுடைய சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். "தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறுவோமாக.
விசித்திரமான காரியம். சீமாட்டியே, உங்களுக்கும் அதே பிரச்சனை. அது சரிதானே? பெண்களுக்கான கோளாறு. முன்னேறி சென்று கொண்டே இருங்கள். கொஞ்ச நேரமாக நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள், பதட்டமாக இருக்கிறீர்கள் தானே? அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம், அதுதான் அதை ஏற்பட செய்தது (உங்களுக்கு புரிகிறதா?), அது முன்கூட்டியே மாதவிடாயை நிறுத்திவிடும் (premature menopause). ஆனால் தேவனுக்கு நன்றி கூறிக்கொண்டே இருங்கள். அது அங்கே புண்ணாகி இருந்தது, ஆனால் அது அது இப்பொழுது நகர்ந்துவிட்டது. தேவனை விசுவாசித்தபடியே செல்லுங்கள், நீங்கள் சுகமாகி விடுவீர்கள். "தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறலாம்.
61. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தபடியே வாருங்கள். சர்க்கரை வியாதியையும் மற்றவற்றையும் மேற்கொள்ளுங்கள். வீட்டிற்கு சென்று சுகமாகுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுதே அவர் உங்களை சுகப்படுத்துவார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? நான் வைக்கட்டும்... உங்கள் மீது நான் கைகளை வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா. அது பரவாயில்லை.
கர்த்தராகிய இயேசுவே, நீர் இவளை சுகமாக்கவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தால் இவள் சென்று சுகமாகட்டும். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்லாம் சரி, சீமாட்டியே, வாருங்கள். ஐயா, வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும். ஏனெனில் நீங்கள் கண்ணாடி அணிந்திருப்பதை நான் பார்க்கிறேன் அது உங்கள் கண்களினால் ஏற்பட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதை பார்க்கலாம். ஒருவேளை வேறு ஏதோவொன்று தவறாயிருக்கலாம் அதை அதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார். அந்த ஜனங்கள் கூறலாம், "ஏன், நிச்சயமாக, உங்களுடைய கண்கள் அதுபோன்று மோசமாக சென்று கொண்டிருப்பதை அறிகையில், மேலும் சற்றே - அந்த சிறிய S- உங்களுடைய கண்களில் இருக்கிறது. அதை பற்றி நாங்கள் பேசப்போவது இல்லை, 'ஏனெனில் உங்களுக்கே அதை பற்றி தெரியும். ஆனால் நிச்சயமாக, ஒருவேளை, வேறொன்றும் தவறாயிருக்கலாம். அதை தேவன் வெளிப்படுத்துவார். ஆம், ஐயா. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உ உங்களுக்கு இருதய கோளாறும் கூட இருக்கிறது. அது சரிதானே? எல்லாம் சரி, இப்பொழுது நீங்கள் போகலாம். நீங்கள் விசுவாசிக்கீறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாமத்தில் சென்று சுகமடையுங்கள்.
62. சீமாட்டியே, வாருங்கள். நீங்கள் வருகையில் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா - இங்கே தேவன் உங்களுக்கு உதவி செய்தால்... உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம் தரித்து நில்லுங்கள்.
ஆம், அங்கு அமர்ந்திருக்கும் சீமாட்டியே, உங்களுக்கு வயிற்றில் கோளாறு ருக்கிறது, சகோதரியே, உங்களுக்கு இல்லையா? ஆம், என்று கூறினாள். வயிற்றில் கோளாறு? உங்களுக்கும் கூட வயிற்றில் கோளாறு இருந்தது, உங்களுக்கு இல்லையா? நீங்கள் இருவரும் சுகமானீர்கள். வீட்டிற்கு சென்று, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை சாப்பிடுங்கள்.
அங்கே உங்களில் இருந்து இரண்டாவதாக அமர்ந்திருக்கும் அந்த சீமாட்டிக்கும் வயிறு கோளாறு இருந்தது, சரியாக அங்கே இருக்கிறாள். அந்த இன்னொரு சீமாட்டிக்கும் கூட, அங்கே அமர்ந்திருக்கும் அவளுக்கும் கூட வயிற்று கோளாறு இருந்தது. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசியுங்கள்... நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது பெப்டிக் புண்ணை ஏற்படுத்தும் ஒரு வயிற்று புண்ணின் நிலையாயிருக்கிறது. நீங்கள் வீட்டிற்கு சென்று, நீங்கள் விரும்பியதை சாப்பிடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
உங்களுக்கு இடையில் அமர்ந்திருக்கும் அந்த சீமாட்டிக்கு திசுக்களின் கிழிவு (rupture) இருந்தது. சீமாட்டியே, அது சரிதானே? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வீட்டுக்கு செல்லுங்கள்.
ஐயா, என்ன காரியம்? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லாம் சரி. உங்களுக்கு ஒரு - ஒரு இருதய நோயும் மற்றும் கீழ் வாதமும் இருந்தது. நீங்கள் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அதாவது தேவன் உங்களை அதிலிருந்து குணப்படுத்துவார் என்று? நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் எழுந்து நிற்கலாம். உங்களுக்கு தெரியுமா, உங்களுக்கு பித்தப்பை கோளாறு இருக்கிறது, அங்கே பக்கத்தில் அமர்ந்திருப்பவருக்கு -- பித்தப்பை கோளாறு. ஐயா, அது சரியல்லவா? எல்லாம் சரி, நீங்களும் கூட எழுந்து நின்று உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம். அல்லது ... நீங்கள் செல்லலாம் - சுகமாகுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவ்வளவு தான். வீட்டிற்கு செல்லுங்கள், நீங்கள் சுகமாகிவிட்டீர்கள். கடந்த இரவு இங்கே நின்று விசுவாசிக்க முயற்சித்தீர்கள், இப்பொழுது, உங்களுடைய விசுவாசம் உங்களை சுகமாக்கியது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்கு செல்லுங்கள்; நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் மேலும் எல்லாம் சரியாகி விடும்.
"தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறலாம்.
63. சீமாட்டியே, வாருங்கள். வாருங்கள், சீமாட்டியே, நீங்கள்தான். என்னை அவருடைய தீர்க்கதரிசி என்றும், அவருடைய ஊழியக்காரன் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? காலையில் எழுந்திருக்கும்போது மிகவும் சிரமமாக இருக்கிறது, உங்களுக்கு இருக்கிறதுதானே? காலை வேளையில் அந்த மூட்டு வலி (arthritis) உங்களை மிகவும் தொல்லைப்படுத்துகிறது. அது சென்றுவிட்டது என்று நான் உங்களிடம் கூறினால் எப்படியிருக்கும்? அதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? மேடையை விட்டு கீழே சென்று, ஒரு சிறிய வாலிப சீமாட்டியை போல் நடந்து செல்லுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், முன்னேறி சென்று, சுகமாகுங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள். ஓ, இப்பொழுது பரிசுத்த ஆவியினால் என்னே செய்ய முடியும்.
ஐயா, வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களுடைய பிரச்சனையை வெளிப்படுத்தினால் நீங்கள் நீங்கள் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்வீர்களா? உங்களுடைய இரத்தத்தில் உங்களுக்கு சக்கரை நோயிருக்கிறது. தேவன் உங்களை சுகமாக்குவார். அதை விசுவாசித்தபடி செல்லுங்கள். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. "தேவனே, நன்றி" என்று நாம் கூறலாம்.
ஐயா, வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இருதய கோளாறு என்று நான் கூறியபோது உங்களை குதிக்க வைத்தது எது? 'ஏனெனில் இருதயம்தான் உங்களை தொந்தரவு செய்கிறது. அது சரிதானே? இப்பொழுது, உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசித்தால்; நீங்கள் வீட்டிற்கு சென்று சுகமாகுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார்.
பிதாவே, நீர் இந்த மனிதனை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், ஏனெனில் இது இல்லாமல், இவர் சீக்கிரமாக மரித்துவிடுவார்; இவருக்கு நீர் உதவவேண்டுமென நான் ஜெபிக் கிறேன். ஆமென். என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடு கூட இருப்பாராக. எல்லாம் சரி. "தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறலாம்.
64. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த சிறிய பையனுக்காக நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பெண்களுக்கான பிரச்சனை. மேலும் இங்கிருக்கும் இந்த சிறிய சீமாட்டி... அவன் அதை மேற்கொள்வான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த காரியங்களெல்லாம் அவனுக்கு நின்றுவிடும் என்று? அந்த திடீர் நோய்பிடிப்பு, அது வலிப்பாயிருக்கிறது. நீங்கள் ஒரு பட்டணத்தி லிருந்து வருகிறீர்கள். பள்ளம் மேடுகள் இருக்கும் தேசத்தில் இருந்து நீங்கள் வருகிறீர்கள், நிறைய... அதை நான் கலிப்போர்னியா அல்லது விர்ஜினியா என்ற இரண்டில் ஏதோவொன்று என்று கூறப்போகிறேன். விர்ஜினியா என்று நான் கூறுகிறேன். அது சரிதானே?
இப்பொழுது, இது வலிப்பாயிருக்கிறது. உங்களில் ஒவ்வொருவரும் தலைகளை தாழ்த்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த குழந்தையை என்னிடம் அழைத்துவாருங்கள். மகனே, இங்கே வா. இப்பொழுது நினைவில்கொள்ளுங்கள், இது வெளியே ஓடிச்செல்லும் ரகம். ஒவ்வொரு தாயும் உங்கள் பிள்ளைகளுடன் நெருங்கி நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் உத்திரவாதம் அல்ல.
நினைவில்கொள்ளுங்கள், ஏதேனும் -- ஏதேனும் சம்பவித்தால், நீங்கள் ஒரு குற்றம் கண்டுபிடிப்பவராயிருந்தால்(critic), இது நீங்கள் வெளியே செல்வதற்கான நேரம். எதைக்காட்டிலும் மிகவும் அதிக தொந்தரவு கொடுக்க கூடிய ஒன்றுதான் வலிப்பு நோய். என்னால் முடியும் என்று நான் கூறவில்லை. தேவனுடைய உதவியால் அதை இவனை விட்டு வெளியே போகும்படி என்னால் செய்யமுடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நினைவில்கொள்ளுங்கள், அது இந்த கட்டிடத்திற்குள்தான் இருக்கும்.
இப்பொழுது, உங்களுடைய உங்களுடைய தலைகளை தாழ்த்துங்கள் மேலும் தலைகளை உயர்த்துங்கள் என்று நான் சொல்லும் வரை தலையை உயர்த்தாதீர்கள். மகனே, இங்கே பார். தேனே, நீ சுகமாக வேண்டுமென்று, அதாவது இந்த காரியம் உன்னை விட்டு நீங்கும்படியாக, தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்து, உனக்காக மரித்தார். சரி, இயேசு உன்னை சுகமாக்கினால், உன் ஜீவிய காலமெல்லாம் நீ தேவனை சேவிப்பாயா, மேலும் மேலும் தேவன் உன்னை ஜீவிக்க வைத்தால் வாலிப மனிதனாகும் போது அவருக்கு சேவை செய்வாயா? மேலும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவர் உன்னை அழைக்கும்போது, அவர் விரும்பும் எதைவேண்டுமானாலும் நீ பிரசங்கிப்பாயா. நீ அதை செய்வாயா?
சர்வவல்லமையுள்ள தேவனே, இயேசுவை கல்லறையிலிருந்து கொண்டு வந்தவரே, இங்கிருக்கும் இந்த பிள்ளையை இந்த பிசாசு திருடிவிட்டான், இவனுடைய ஜீவியத்தில் எதிர்காலம் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அதனால்தான் இந்த சிறிய பையனை இந்த பரிசீலனைக்கு உட்படுத்துகிறேன், மேலும் இந்த பிள்ளை மீது இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்கிறேன். இப்பொழுது, வலிப்பு என்று அழைக்கப்படும் பிசாசே, தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், ஜீவிக்கிற தேவனை கொண்டு நான் உனக்கு கட்டளையிடுகிறேன், இந்த பையனை விட்டு வெளியே வா. இவனை விட்டு போ. இந்த கட்டிடத்தை விட்டு வெளியே போ, வேறு யாரையும் தொல்லைப்படுத்தாதே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், உன்னை நான் கட்டி இந்த பிள்ளையை விட்டு அனுப்புகிறேன்; கல்வாரியில் தேவனுடைய குமாரன் இயேசுவின் மிகுந்த பாடுகளின் அதிகாரத்தை கொண்டு, இந்த பிள்ளையை விட்டு உன்னை நான் போக சொல்கிறேன்.
மகனே, இங்கே பார். தாயாரே, இப்பொழுது அது இவன் மேல் இல்லை. அது போய்விட்டது. இப்பொழுது, நீங்கள் விசுவாசித்துக்கொண்டே இருங்கள்; அவை இவன் மீது திரும்ப வராது. தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. முன்னேறி செல்லுங்கள், சகோதரியே, உங்களுடைய பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்கு செல்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
"தேவனுக்கு நன்றி" என்று நாம் கூறலாம். இப்பொழுது, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள். உங்களுடைய தலையை உயர்த்துங்கள். அது ஆடப்போகிறது (show up) என்று நான் நினைத் தேன். அந்த பையனுக்கு எதிர்காலம் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நான் ஏதோவொன்றை பார்த்தேன். அது என்ன வென்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, "ஏனெனில் இந்த நேரத்தில் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன், ஆனால் நான் - நான் அதை நினைத்தேன் - அதாவது ஏதோவொன்று அந்த பையனுக்கு காண்பிக்கப்பட்டது.
65. இப்பொழுது, பயபக்தியாயிருங்கள். தேவனில் விசுவாசமாயி ருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். அங்கே அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறிய சீமாட்டியை பார்க்கிறேன். ஆவியானது, (The Spirit's) ஒரு ஒளி வட்டம் (a halo) அவள் மீது தொங்கிகொண்டிருக்கிறது. அது ஒரு... அவளுக்கு அவளுடைய இடுப்பில் ஏதோ பிரச்சனையிருக்கிறது. நீங்கள் பதட்டமான நிலையினால் அவதிப்படுகிறீர்கள். நான் உங்களுடன் பேசவேண்டும் என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். சீமாட்டியே, அது சரியல்லவா? நீங்கள் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தபோது. அங்கிருக்கும் அந்த வெள்ளை உடை அணிந்த சிறிய சீமாட்டி, அது சரியல்லவா? நான் உங்களை கண்டேன். எல்லாம் சரி. இப்பொழுது நீங்கள் சரியாக போகிறீர்கள். நீங்கள் முழுவதும் சுகமாக போகிறீர்கள்.
அங்கே ஒரு பரிதாபமான வயோதிப மனிதன் தன்னுடைய கரத்தில் ஒரு ஊன்று கோலை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். ஐயா, இந்த பக்கமாக பாருங்கள். என்னை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா... அது எல்லாம் சரி. என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லாம் சரி. உங்களுக்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டது அது உங்களை இந்த நிலைக்குள்ளாக்கி விட்டது. அது இருந்திருக்கும்; இதே உடையை நீங்கள் அணிந்திருந்தீர்கள். கடந்த நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு முன்போ நீங்கள் மருத்துவரை சந்திக்க சென்றீர்கள். மருத்துவர் ஏதோவொன்றை மேலே வைக்கிறார்... அதை உங்கள் இருதயத்தின் மீது வைக்கிறார். உங்களுக்கு இருதய கோளாறு இருக்கிறது என்று அவர் கூறுகிறார். அவர் தன்னுடைய தலையை அசைத்து உங்களால் ஜீவிக்க முடியாது ஆனால் கொஞ்ச நாள் மட்டுமே ஜீவிக்க முடியும் என்கிறார். ஐயா, அது உண்மையா? நான் உங்களுடைய இடத்திலிருந்திருந்தால், இயேசு கிறிஸ்துவை எனக்கு சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டு, அந்த ஊன்று கோலை என் தோளின் மீது வைத்துக்கொண்டு, இங்கிருந்து வெளியே சென்று, தேவனை மகிமை படுத்தியிருப்பேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் கொஞ்சம் துணிச்சலாயிருங்கள், அவ்விதமாக, பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் பற்றுடன், வெளியே செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, அதை உங்களுடைய தோளில் வைத்துக்கொண்டு நீங்கள் செல்லலாம். நீங்கள் சுகமாகி விட்டீர்கள்.
66. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் கூறலாம். மேல்... இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் விசுவா சிக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, உங்களுடைய தலைகளை தாழ்த்துங்கள்.
பரலோக பிதாவே, ஒவ்வொரு அசுத்த ஆவியையும் நீர் துரத்த வேண்டுமென்று, உம்முடைய குமாரன் இயேசுவின் நாமத்தால், நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். கட்டடத்தில் இருக்கும் ஒவ்வொரு பிசாசும், அவை யாவும் வெளியேறட்டும், மேலும் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் பரிபூரண சுகமடையட்டும்.
ஓ தேவனே, நீர்தான் இங்கே நின்றிருந்தீர், மணிகணக்காக நின்று, உம்முடைய வார்த்தையை அடையாளங்கள் பின்தொடர்வதின் மூலம் உறுதிப்படுத்தினீர், இந்த உலகத்தை சேர்ந்த இந்த ஜனங்கள் இன்னும் எவ்வளவு காலம்தான் உம்மை, அவிசுவாசிப்பார்கள், கர்த்தாவே? ஓ தேவனே, சரியாக இப்பொழுதே, ஒவ்வொரு அவிசுவாசத்தின் ஆவியும், ஒவ்வொரு சந்தேகமும் ஜனங்களை விட்டு துரத்தப்படும்படியாக அருள் செய்யும்; உம்முடைய உயிர்த்தெழுந்த குமாரனின் வல்லமை, தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, பெலத்தையும் வல்லமையையும் தரட்டும். இப்பொழுதே இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும் சுகமடையட்டும்.
கர்த்தாவே, முடமானவர்கள் நடக்கட்டும். ஊன்று கோல்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும், தங்கள் ஊன்று கோல்களை அவர்களின் தோள்களின் மீது வைத்துகொண்டு நடக்கட்டும். சக்கர தூக்குபடுக்கையில் (wheel stretcher) இருப்பவர்கள், அந்த சக்கர வண்டியை முன்னே தள்ளிவிட்டு, இன்றிரவே நடக்கட்டும், மேலும் எல்லா இருதய நோயாளிகளும் சுகமானவர்களாக, களிகூர்ந்தபடியே செல்லட்டும். கர்த்தாவே, ஒவ்வொருவரும் கல்வாரியில் இயேசு கிறிஸ்து பட்டப் பாடுகளின் மூலமாக, நான் ஒவ்வொரு பிசாசையும் கடிந்து கொள்கிறேன், அங்கேதான் அவர் ஜெயங்கொண்டார், ஒவ்வொரு பிசாசும் தோற்கடிக்கப் பட்டது என்று நான் கூறுகிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஜனங்களை வி ட்டு அவன் போகும்படி நான் கேட்கிறேன். ஆமென்.
தன்னுடைய குமாரனை மரித்தோரிலிருந்து எழுப்பிய சர்வ வல்லமையுள்ள தேவன், உங்கள் ஒவ்வொருவரையும் இந்த நிமிடத்தில் சுகமாக்குவார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், உங்கள் காலுன்றி நில்லுங்கள். உங்களுடைய ஊன்று கோல்களை தூக்கி எறியுங்கள், உங்கள் இடத்தில் இருந்து எழுந்திருங்கள், தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்குவாராக.